அதிகாலையில் நடந்த ரயில் விபத்து.., தண்டவாளத்தில் இருந்த பொருளால் விபரீதம்
உத்தரபிரதேச மாநிலத்தில் அதிகாலையில் நடந்த ரயில் விபத்தில் பயணிகள் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்று தகவல் வந்துள்ளது.
ரயில் விபத்து
இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசியில் இருந்து புறப்பட்டு, குஜராத் மாநிலம் அகமதாபாத் நோக்கி சபர்மதி பயணிகள் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது.
இந்த ரயில், பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற போது இன்று (ஆகஸ்ட் 17) அதிகாலை கான்பூர் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதாவது, உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூர் மற்றும் பீம்சென் நிலையத்துக்கு இடையில் தண்டவாளத்தில் இருந்த கற்பாறையின் மீது இடித்து விபத்து ஏற்பட்டது.
முதற்கட்டமாக, இந்த ரயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டதாக தகவல் வந்துள்ளது. மேலும், விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்துள்ளன.
முக்கியமாக, இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அங்கிருந்து ரயில் பயணிகளை பேருந்தில் ஏற்றி அருகில் உள்ள ரயில் நிலையத்துக்கு அழைத்துச் சென்று சிறப்பு ரயிலில் அகமதாபாத்திற்கு அதிகாரிகள் அனுப்பிவைத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |