சகோதரியை பழிவாங்க தன் 9 மாத குழந்தையை வீசிக்கொன்ற கொடூர பெண்
இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் தனது 9 மாத குழந்தையை பெண்ணொருவர் தூக்கி வீசி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9 மாத குழந்தை
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சு தேவி (27) என்ற பெண் பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது. அதில் அஞ்சு தேவி தன் 9 மாத குழந்தையை மாடியில் இருந்து தூக்கி எறிந்ததாக கூறப்பட்டிருந்தது.
குழந்தையின் பாட்டி ஷோபா தேவி அளித்த புகாரின் பேரில் பொலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது, அஞ்சு தேவி தனது சகோதரியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அச்சமயம் தனது குழந்தையை இரண்டு மாடி வீட்டின் மேல் இருந்து தூக்கி வீசியுள்ளார். பின்னர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அதனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறியுள்ளனர் என தெரிய வந்தது.
இதனையடுத்து அஞ்சு தேவியை கைது செய்த பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சகோதரியுடன் அடிக்கடி தகராறு
முதற்கட்ட விசாரணையில், காதல் திருமணம் செய்துகொண்ட அஞ்சு தேவி கடந்த 2 ஆண்டுகளாக தனது தாயுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
அவருடன் சகோதரி மனிஷாவும் கடந்த 2 மாதங்களாக அதே வீட்டில் வசித்து வந்துள்ளார். இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில்தான் குழந்தையை கொன்று சகோதரியை சிக்க வைக்க அஞ்சு தேவி திட்டமிட்டதாக தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |