குரங்கு என கணவர் அழைத்ததால்..23 வயது இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் மொடலிங்கில் ஆர்வம் கொண்ட பெண்ணை, அவரது கணவர் குரங்கு என்று அழைத்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலித்து திருமணம்
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த தம்பதி தன்னு சிங், ராகுல் ஸ்ரீவஸ்தவா. இவர்கள் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தவர்கள் ஆவர்.
இருவரின் குடும்பத்தினரும் அந்தத் திருமணத்தை ஏற்றுக்கொண்ட நிலையில், தம்பதியர் இந்திரா நகரில் வசித்து வந்தனர். ராகுல் ஆட்டோ சாரதியாக பணியாற்றி வருகிறார்.
ராகுல், தன்னு மற்றும் அவரது தங்கை ஆகியோர் ஒன்றாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தன்னு கேலி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் உணவு வாங்க வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய ராகுல், மனைவி தன்னுவை அழைக்குமாறு அஞ்சலியிடம் கேட்டுள்ளார். அப்போது அறையின் கதவு உள்ளே பூட்டப்பட்டிருப்பது தெரிந்து, அழைப்பிற்கு பதில் வராததால் அஞ்சலி ஜன்னல் வழியாக பார்த்துள்ளார்.
தூக்கிட்டு
தன்னு ஒரு துணியால் ஆன கயிற்றில் தூக்கிட்டு தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே ராகுல் உட்பட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தன்னுவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதனையடுத்து தன்னுவின் உடலைக் கைப்பற்றிய பொலிஸார் விசாரணையைத் தொடங்கினர்.
மொடலிங்கில் ஆர்வம் கொண்டிருந்த தன்னுவை அவரது காதல் கணவர் குரங்கு என்று அழைத்துள்ளார்.
இதனால் மனமுடைந்த அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |