கணவனை கொன்று வீட்டு கழிப்பறையில் புதைத்த மனைவி: 45 நாட்களாக நடத்திய நாடகம்
ஆக்ராவில் கணவனை கொன்று வீட்டு கழிப்பறையில் புதைத்த மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆக்ராவில் கணவனை கொன்ற மனைவி
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் சுரேந்திர சர்மா என்ற நபர் காணாமல் போனதாக புகார் வழங்கப்பட்டதை அடுத்து கடந்த 45 நாட்களாக அவரை பொலிஸார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் சுரேந்திர சர்மாவின் மனைவி ரூபி வழங்கும் தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக இருப்பதாக பொலிஸாரிடம் சுரேந்திர சர்மாவின் சகோதரர் பொலிஸாரிடம் புகார் எழுப்பியுள்ளார்.

இதையடுத்து தம்பதியினரின் வீட்டை சோதனையிட்ட பொலிஸார், கழிப்பறையில் புதிதாக சிமெண்ட் பூச்சு செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதை உடைத்து பார்த்தனர்.
அப்போது அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக சிமெண்ட் தளத்திற்கு அடியில் சுரேந்திராவின் உடல் புதைக்கப்பட்டிருந்தது.
கண்டெடுக்கப்பட்ட உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மனைவியின் நாடகம்
கணவர் சுரேந்திர சர்மா காணாமல் போனதில் இருந்தே மனைவி ரூபி மிகுந்த மன உளைச்சலில் இருப்பது போலவும், கணவரை பொலிஸாருடன் இணைந்து தேடுவது போலவும் நடித்து வந்துள்ளார்.

ஆனால் ரூபி வழங்கிய சந்தேகத்திற்குரிய தகவலை அடுத்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் மனைவி ரூபியின் உண்மையான முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த கொடூர செயலுக்கு வேறு யாரும் உதவியாக இருந்தார்களா என பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |