கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்த சட்டக்கல்லூரி மாணவி! உறவினர்கள் கூடி வாழ்த்து
உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர், கடவுள் கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்து கொண்ட பெண்
உத்தர பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் நடைபெற்ற வித்தியாசமான திருமண விழாவில் பெண் ஒருவர், கடவுள் கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கடவுள் கிருஷ்ணன் மீது கொண்ட அதீத அன்பால், கிருஷ்ணர் சிலைக்கு முடிச்சுப் போட்டுக் கொண்டு, இனி தனது வாழ்நாள் முழுவதும் கிருஷ்ணருக்காக வாழ அந்த பெண் முடிவு செய்துள்ளார்.
ஓய்வு பெற்ற ஆசிரியரான ரஞ்சித் சிங் சோலங்கியின் மகளான ரக்ஷா(30) முதுகலை படிப்பை முடித்து விட்டு தற்போது எல்.எல்.பி படித்து வருகிறார்.
இதற்கிடையில், கிருஷ்ணர் அடிக்கடி கனவில் வந்து மாலை அணிவிப்பதாகவும், அவரையே கணவராக கருதி வாழ்ந்து வருவதாகவும் ரக்ஷா குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோர் முன்னிலையில் திருமணம்
இந்நிலையில் கிருஷ்ணரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையை ரக்ஷா அவரது தந்தை ரஞ்சித் சிங்கிடம் தெரிவிக்கவே, அவரும் திருமண விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
India Today/Siraj Qureshi
இதற்காக விருந்தினர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கான உணவு, பானங்கள் மற்றும் இசையும் ஏற்பாடு செய்யப்பட்டு திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.
திருமண விழாவிற்கு பிறகு, மணமகள் கிருஷ்ணர் சிலையுடன் சுக்செயின்பூர் பகுதியில் உள்ள தனது உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர், கிருஷ்ணரின் சிலையை மடியில் சுமந்து கொண்டு தாய் வீடு திரும்பினார்.
இந்த வித்தியாசமான திருமணம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.