இளம்பெண் ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் பலி: ஜாமீனில் விடுவித்த நீதிபதி
Young woman who ran over and killed a 60-year-old man with her speeding Thar has been granted bail: வெளிநாட்டில் படிக்கும் மாணவி ஒருவர் ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் பலியான நிலையில், அந்த மாணவிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்திலுள்ள கான்பூரில், கடந்த சனிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம் 7ஆம் திகதி, தீபாவளிக்காக தன் மனைவிக்கு புடவை வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார் சந்தோஷ் சிங் சௌஹான் (60).
இளம்பெண் ஏற்படுத்திய விபத்து
சந்தோஷ் தனது ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருக்க, வேகமாக வந்த மஹிந்த்ரா தார் வகை வாகனம் ஒன்று அவரது ஸ்கூட்டர் மீது மோதியுள்ளது.

சுமார் 20 மீற்றர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்ட சந்தோஷின் ஸ்கூட்டர் சுவர் ஒன்றில் மோத, அவர் அந்த இடத்திலேயே பலியாகிவிட்டார்.
விபத்தை ஏற்படுத்திய இளம்பெண்ணின் பெயர் கீதா சச்சன் (23).
கீதா இத்தாலி நாட்டில் படித்துக்கொண்டிருக்கும் நிலையில், தீபாவளிக்காக இந்தியா திரும்பியுள்ளார்.
ஜாமீனில் விடுவிப்பு
கீதாவை கைது செய்த பொலிசார் அவரை மாஜிஸ்திரேட் முன் ஆஜர் செய்துள்ளனர்.
ஆனால், பொலிசார் ஒரு தவறு செய்துள்ளனர். அதாவது, உயிர் பலி வாங்கிய சாலை விபத்து வழக்கு பதிவு செய்வதற்கு பதிலாக, அவர்கள் கீதா மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பொலிசார் நீதிமன்றக் காவல் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், சாலை விபத்தில் உயிர் பலியான நிலையில், எப்படி கொலை வழக்குப் பதிவு செய்யப்படலாம் என நீதிபதி கேள்வி எழுப்பியதுடன், அவர்களுடைய கோரிக்கையையும் ஏற்க மறுத்துவிட்டார்.
பொலிசாரின் தவறை சுட்டிக்காட்டிய நீதிபதி, பொலிசார் அந்தப் பெண்ணின் அரசியல் சாசன உரிமையை மீறிவிட்டதாகக் கூறி, அவரை ஜாமீனில் விடுவித்துவிட்டார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரை சமாதானப்படுத்துவதற்காக கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்த பொலிசாரின் நடவடிக்கை, குற்றம் சாட்டப்பட்ட நபர் தப்பிச் செல்ல வழிவகை உருவாக்கிவிட்டதா என கேள்வி எழுந்துள்ளது.