இந்த மாதம் வரவிருக்கும் டாப் 10 ஸ்மார்ட் போன்கள் என்னென்ன? இதோ விலையுடன் முழு விபரம்
உலகில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா பரவல் காரணமாக, பெரும் அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.
மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதே சிரமமாக இருந்து வருகிறது. இது போன்ற சூழ்நிலை காரணமாக ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் தங்களுடைய புதிய போன்களை வெளியிடுவதில் தாமதித்தன.
ஆனால், தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால், மீண்டும் ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளன. கடந்த மாதம், அதற்கு முந்தைய மாதம் வெளிவர வேண்டிய போன்களை எல்லாம், இந்த மாதம் வெளியிட சில ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
அதன் படி, என்னென்ன ஸ்மார்ட்போன்கள் இந்த மாதத்தில் வெளிவரவுள்ளது என்பதைப் பற்றி பார்ப்போம் .
Samsung A22
சாம்நிறுவனம் M22 மற்றும் A22 என்ற இரண்டு ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்தனர். இரண்டுமே ஒரே சிறப்பம்சம் கொண்டவை என்றாலும், ஒன்று ஆப் லைனில்(கடைகளில்) மற்றொன்று ஆன் லைனில் கிடைக்கும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதில் A22 ஸ்மார்ட் போன் 6GB RAM/128GBSTORAGE-வுடன் வரவுள்ளது. இதன் ஆரம்பவிலை 18,499 என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களும், இந்த மாதம் வெளிவரவுள்ளதாம், இது மட்டுமின்றி சாம்சங் தரப்பில் இருந்து இன்னொரு ஸ்மார்ட் போனும் இந்த மாத வெளிரவவுள்ளதாம்,
ஆனால் அதைப் பற்றிய பெயர் இன்னும் வெளியாகவில்லை.
Asus 8Z Series
இந்த ஸ்மார்ட் போன் ஏற்கனவே பல நாடுகளில் வெளிவந்துவிட்டாலும், இன்னும் இந்தியாவில் வெளியாகவில்லை. இதை கடந்த மாதம் வெளியிடலாம் என்று இந்த நிறுவனம் நினைத்திருந்தது.
ஆனால், இந்த கொரோனா காலகட்டம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது இதை வெளியிட இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
One plus Nord 2
ஒன் பிளஸ் நிறுவனம், நிச்சயமாக இந்த முறை இந்த ஸ்மார்ட் போனை வெளியிட வேண்டும் என்பதில் திட்டவட்டமாக இருக்கிறதாம். குறிப்பாக இந்த மாதத்தின் நடுவிலோ அல்லது இறுதியிலோ நிச்சயமாக இந்த போனை எதிர்பார்க்கலாம்.
மேலும், இதற்கு முன்பு இந்த நிறுவனத்தால் வெளியான ஒன்பிளஸ் OnePlus Nord CE-யின் ஆரம்ப விலை 22,999 ரூபாயாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் OnePlus Nord-ன் அடிப்படை விலை மாறுபாடு 24,999-ஆக உள்ளாதால்,
இதன் விலை இதற்கு கீழே இருக்க வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.
oppo reno 6 series
இந்த ஸ்மார்ட் போன் வரும் 15,16 அல்லது 17-ஆம் திகதிக்குள் வெளியிட முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் டிசைன் மற்று கமெரா இளைஞர்களை மிகவும் கவர்ந்திருப்பதால், இது ஸ்மார்ட் போன் சந்தையில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று பார்க்கலாம்.
இவர்கள் oppo reno 6 மற்றும் oppo reno 6 Pro என இரண்டு போன்களை வெளியிட்ட திட்டமிட்டிருக்கிறார்களாம். இதன் விலை குறித்து இன்னும் எந்த ஒரு உறுதியான அறிவிப்பு வெளியாகவில்லை.
Poco
சமீப நாட்களாக, இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த போனாக மாறிவரும், போகோ இந்த மாதம் ஒரு ஸ்மார்ட் போனை வெளியிட முடிவு செய்துள்ளனர், ஆனால் அதைப் பற்றி எதுவும் தெரிவிக்காமல் ஒரு இன்ப அதிர்ச்சியாக அறிவிக்கவுள்ளனராம். இது பட்ஜெட் ஸ்மார்ட் போனாக(10000 ரூபாய்க்குள்) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Motorola Edge Series
மோட்டோரோலா ரசிகர்களாக இருந்தால், இந்த முறை அவர்களுக்காகவே மோட்டோரோலா ஒரு செம ஸ்மார்ட் போனை வெளியிடவுள்ளனர். இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் வெளியிடபட்டு அதிக நாட்கள் ஆகிவிட்டதால், எந்த மாதிரியாக வெளியிட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்த ஸ்மார்ட் போன் இந்த மாதத்தின் கடைசியில் வெளியாகும் என்றும், இதை அவர்கள் பிளிப்கார்ட்டுடன் டை ஆப் வைத்து வெளியிட முடிவு செய்துள்ளனராம். இரண்டு போன்கள், அதில் ஒன்று பட்ஜெட் போன் மற்றொன்று கொஞ்சம் காட்ஸ்லி தான்.
Real me GT
அடுத்தடுத்து ஸ்மார்ட் போன்களை வெளியிட்டு வரும் ரியல் மீ இந்த முறையும், அதாவது இந்த மாதமும் இரண்டு ஸ்மார்ட் போன்களை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் ஒன்று Real me GT-ஆக இருக்கலாம். மற்றொன்று பட்ஜெட் போனாக, அதாவது 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரூபாய்க்குள் c சீரிஸ் வெளியிடலாம் என்ற தகவலும் கசிந்துள்ளது.
Micromax IN 2B
இந்த நிறுவனம் சார்பில் 2B மற்றும் 2C என்ற பெயரில் இரண்டு ஸ்மார்ட்போன் வரவுள்ளது.
Infinix Zero X
ஸ்மார்ட்போன்களில் அதி விரைவில் சார்ஜ் ஆக கூடிய160W ஸ்மார்ட்போனை கொண்டுள்ள Infinix Zero X, இந்த மாதம் நிச்சயமாக இந்தியாவில் கொண்டு வரலாம்.
Redmi 10 series
ஸ்மார்ட் போன்களில் இப்போது ரெட்மி 10 சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்து இந்த நிறுவனம் Redmi 10 series(Redmi10, Redmi10A) வெளியிடலாம் அல்லது அறிவிப்பு கூட வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில், இந்த மாதம் நிறைய ஸ்மாட்போன்கள் சந்தைக்கு வரவுள்ளதால், அதற்கு போட்டியாக இந்த போனை இறக்கலாம். இந்த போன் ஒரு பட்ஜெட் போனாகவே இருக்கும், அதுவும் 10 ஆயிரம் ரூபாய்க்குள்ளே கிடைக்கலாம்.