பிரான்சில் மர்ம நபரால் சுடப்பட்ட பிரித்தானிய குடும்பம்: வழக்கில் முக்கிய தகவல்
பிரான்சில் நடந்த பயங்கர கொலை சம்பவம் ஒன்று தொடர்பில், ஒரு முக்கிய தகவல் கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்
2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி, பிரான்சுக்கு சுற்றுலா சென்றிருந்த ஒரு பிரித்தானியக் குடும்பம் சென்ற காரை நோக்கி, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
அவர் சுட்டதில், காரிலிருந்த Saad al-Hilli (50), அவரது மனைவி Iqbal (47) மற்றும் தாயார் Suhaila Al-Allaf (74) ஆகியோரும், அவ்வழியே சைக்கிளில் சென்றுகொண்டிருந்த Sylvian Mollier (45) என்ற பிரான்ஸ் நாட்டவரும் உயிரிழந்தனர்.
தம்பதியரின் ஒரு மகளான Zainab (7) காயத்துடன் உயிர் பிழைக்க, மறு நாள் தடயவியல் நிபுணர்கள் இறந்தவர்களின் உடல்களை அகற்றும்போது, தாய் Iqbalஇன் கால்களுக்கிடையில் அவரது இரண்டாவது குழந்தையான Zeena (4) பயந்து நடுங்கிக்கொண்டு ஒளிந்திருப்பது தெரியவந்தது.
இந்த துப்பாக்கிச்சூட்டில், அவ்வழியே சைக்கிளில் வந்துகொண்டிருந்த பிரான்ஸ் நாட்டவரான Sylvain Mollier (45) என்பவரும் கொல்லப்பட்டிருந்தார்.
முக்கிய தகவல்
சுமார் 12 ஆண்டுகளுக்கும் மேலாக, Saad al-Hilli குடும்பத்தினரை துப்பாக்கியால் சுட்டது யார் என்பது தெரியவராத நிலையில், தற்போது அந்த வழக்கு தொடர்பில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, கொலையாளி ஒரு முன்னாள் ராணுவ வீரராக இருக்கக்கூடும் என்பதற்கு ஆதாரமாக சில விடயங்களை நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
துப்பாக்கியால் சுட்ட நபர், 60 முதல் 90 விநாடிகளுக்கும் 21 முறை சுட்டிருக்கிறார்.
சுட்ட குண்டுகளில் 18 குண்டுகள் குறிதவறாமல் Saad al-Hilli குடும்பத்தினரைத் தாக்கிக் கொன்றுள்ளன.
அப்படியானால், அந்த நபர் துப்பாக்கி சுடுவதில் கைதேர்ந்த ஒருவராக இருக்கவேண்டும்.
பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, வழக்கமாக கூலிக்கு கொலை செய்பவர்கள் பயன்படுத்தாத ஒரு துப்பாக்கி. ஏனென்றால், அது அடிக்கடி செயல்படாமல் நின்றுவிடுமாம்.
ஆகவேதான், குழந்தை Zainabஐ சுடும்போது துப்பாக்கி மக்கர் செய்ய, அவளது தலையில் துப்பாக்கியின் பின்பக்கத்தால் தாக்கியிருக்கிறார் கொலையாளி.
விடயம் என்னவென்றால் சிறப்பு ஆபரேஷன்களின்போது ராணுவ வீரர்கள் இப்படித்தான் தாக்குவார்களாம். அதுவும், இந்த தாக்குதல் சுவிட்சர்லாந்தில்தான் கற்றுக்கொடுக்கப்படுமாம்.
ஆக, Saad al-Hilli குடும்பத்தினரைக் கொலை செய்த நபர், சுவிட்சர்லாந்தில் சிறப்பு ஆபரேஷன் பயிற்சி பெற்ற ஒரு முன்னாள் ராணுவத்தினராக இருக்கக்கூடும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |