மூன்று பிரித்தானியர்களை சுட்டுக் கொன்ற மர்ம நபர்... தாயின் உடைக்குள் மறைந்திருந்த குழந்தை: சுவிட்சர்லாந்தில் கிடைத்த துப்பு
பிரான்சில் நடந்த பயங்கர கொலை சம்பவம் ஒன்று தொடர்பில், சுவிட்சர்லாந்தில் ஒரு முக்கிய துப்பு கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் சுற்றுலாத்தலம் ஒன்றிற்கு சென்றிருந்தது, ஒரு பிரித்தானிய ஈராக்கிய குடும்பம்.
சுற்றுலா சென்றிருந்த பொறியாளரான Saad al-Hilli, அவரது மனைவி Iqbal மற்றும் அவரது தாய், Saad al-Hilliயின் 7 வயது மகள் Zainab, ஆகியோரை மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்.
அதில் Saad al-Hilli, அவரது மனைவி மற்றும் மாமியார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாக, இரத்த வெள்ளத்தில் கிடந்தாள் Zainab.
அப்போது அவ்வழியே சைக்கிளில் வந்த பிரான்ஸ் நாட்டவரான ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தகவலறிந்து வந்த பொலிசார் முதல் கட்ட விசாரணையை முடித்து தடயவியல் நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர். Zainab உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.
சம்பவம் நடந்து பொலிசார் விசாரனையை முடித்து எட்டு மணி நேரத்திற்குப் பின் தடயவியல் ஆய்வில் இறங்கிய நிபுணர்கள், உயிரிழந்த Saad al-Hilliயின் மனைவியின் உடலை அகற்ற முயலும்போது, எதிர்பாராத ஒரு அதிர்ச்சி காத்திருந்தது அவர்களுக்கு.
ஆம், அந்த பெண்ணின் உடைக்குள் ஒரு பெண் குழந்தை மறைந்திருந்தது. Zeena என்ற அந்த நான்கு வயது குழந்தையை அதன் தாய் தனது புடவைக்குள் மறைத்து வைத்திருந்ததும், தாய் உயிரிழந்தும், அந்த பெண் குழந்தை பத்திரமாக இருப்பதையும் கண்ட நிபுணர்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள். அவளும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாள்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வழக்கில் ஆதாரம் எதுவுமே கிடைக்கவில்லை.
Saad al-Hilli குடும்பத்தைக் கொலை செய்தது யார், எதற்காக என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கவேயில்லை.
2012இல் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்துகொண்டே வருகிறது. இந்நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக சுவிட்சர்லாந்தில் வழக்குக்கு உதவியாக ஒரு துப்புக் கிடைத்துள்ளது.
பாரீஸிலுள்ள லாட்ஜ் ஒன்றில் நடத்தப்பட்ட ரெய்டு ஒன்றில், முன்னாள் பொலிசார் மற்றும் இராணுவ அதிகாரிகள் கொண்ட கிரிமினல் கேங் ஒன்று சிக்கியுள்ளது.
அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில், பிரான்சில் நடந்த கொலை சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட அதே வகை துப்பாக்கி குண்டுகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வகை குண்டுகள் அபூர்வமானவை என்பதால், அவற்றின் கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முக்கிய துப்பு கிடைத்துள்ளதையடுத்து வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது.