இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமான 2025 Honda Activa 110.., விலை மற்றும் முக்கியமான சிறப்பம்சம்
2025 ஹோண்டா ஆக்டிவா 110 (Honda Activa 110) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
2025 Honda Activa 110 அறிமுகம்
புதிய அம்சங்கள் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுடன் 2025 ஹோண்டா ஆக்டிவா 110 (Honda Activa 110) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரில் புதிய ஓபிடி2-பி மாசு உமிழ்வு தரத்திற்கு இணங்க தயார் செய்யப்பட்டிருக்கும் எஞ்சின் உள்ளது. இதற்கு வரும் நாட்களில் வரவேற்பு மிக அமோகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2025 ஹோண்டா ஆக்டிவா 110 (Honda Activa 110) ஸ்கூட்டரின் அறிமுக விலை ரூ. 80,950 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.
இந்த ஸ்கூட்டரில் மிக முக்கியமான மாற்றம் என்னவென்றால் புதிய டிஎஃப்டி திரை (TFT Display) வழங்கப்பட்டிருப்பது தான். இது 4.2 அங்குல திரை ஆகும். இதனை நாம் ஆக்டிவா 125-யிலும் பார்க்க முடியும். அதில் இருந்து தான் இதில் பயன்படுத்தியுள்ளனர்.
மேலும், இந்த திரையின் மூலம் மைலேஜ் விபரம், ட்ரிப் மீட்டர், பெட்ரோல் முழுமையாக காலியாக இருப்பதை அறிவிக்கும் வசதி ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.
இதில், USB C type charging, LED headlight, digital trip meter ஆகிய அம்சங்கள் உள்ளன. மேலும், 109.51 cc single cylinder PGM-FI engine பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், Idling stop system இருப்பதால் அதிக மைலேஜ் திறனுக்கு வழிவகுக்கும். அதுமட்டுமல்லாமல், இந்த மோட்டார் அதிகபட்சமாக 7.8 எச்பி மற்றும் 9.03 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும்.
இந்த மாதிரியான மாற்றங்களால் தான் ரூ.2,266 உயர்வு செய்யப்பட்டுள்ளது. இது STD, DLX மற்றும் H-Smart என மொத்தம் மூன்று வகைகளில் கிடைக்கிறது. ஆனால், டிஎல்எக்ஸ் (DLX) மற்றும் எச்-ஸ்மார்ட் (H-Smart) வேரியண்டுகளின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |