ஹரியின் தந்தை யார் என்பது தொடர்பான சர்ச்சை: பெண் நிபுணரின் உறுதியான தீர்ப்பு
இளவரசர் சார்லஸ் ஆனாலும் சரி, அவரது மனைவி இளவரசி டயானாவானாலும் சரி, இருவரும் தங்கள் திருமண வாழ்க்கைக்கு செய்த துரோகம், இன்னமும் அவரது பிள்ளைகளுக்கு அவமானத்தைக் கொண்டுவந்துகொண்டே இருக்கிறது.
ஹரியின் உண்மையான தந்தை யார் என்ற பிரச்சினை
இளவரசி டயானா, சார்லசுடன் வாழ்ந்துகொண்டிருக்கும்போதே வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததை உலகமே அறியும்.
அவர்களில் ஒருவர், டயானாவின் பாதுகாவலரான James Hewitt என்பவர். அவருடன் டயானா ஹொடர்பு வைத்திருந்ததால், இளவரசர் ஹரியினுடைய தந்தை சார்லஸ் அல்ல, James Hewittதான் என நீண்டகாலமாக ஒரு செய்தி உலவி வருகிறது.
இளவரசர் ஹரியின் முடி மற்றும் தாடியின் நிறம், அவரது தலையில் உருவாகத் துவங்கியுள்ள வழுக்கை என பல விடயங்கள், அவர் James Hewittஐப் போலவே இருப்பதாக கூறப்படுவதால், அவர்தான் ஹரியினுடைய உண்மையான தந்தை என செய்திகள் வெளியாகிக்கொண்டே உள்ளன.
Image: Simone Malik / SWNS
பெண் நிபுணர் அளித்துள்ள விளக்கம்
ஹரி பிரச்சினை நீண்டுகொண்டேசெல்லும் நிலையில், பெண் நிபுணரொருவர், ஹரியின் தந்தை James Hewitt என்னும் வதந்தி உண்மையில்லை என தான் உறுதியாக தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
அதற்குக் காரணம், தனக்கு ஒரு சிறப்பு வரம் இருப்பதாகவும், முகங்களை வைத்து தன்னால் சில விடயங்களைக் கூறமுடியும் என்றும் கூறியுள்ளார் Simone Malik என்னும் அந்தப் பெண்.
இளவரசர் ஹரிக்கு குறுகலான நெற்றி, சார்லசுக்கும், ஏன் டயானாவுக்கும் கூட குறுகலான நெற்றிதான். ஆனால் James Hewittக்கு அகன்ற நெற்றி.
Image: Getty Images
அத்துடன், டயானாவுக்கும் James Hewittக்கும் உருண்டையான பெரிய கண்கள், ஆனால், சார்லசுக்கு மட்டும்தான் சிறிய ஆனால் கூர்மையான கண்கள். அதே சிறிய கூர்மையான பார்வை கொண்ட கண்களைக் கொண்ட இன்னொரு நபர் ஹரிதான்.
ஆக, பலர், நீண்ட காலமாக James Hewittதான் ஹரியின் தந்தை என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு முறை அவர்களைப் பார்க்கும்போதும், இல்லவே இல்லை என்றே எனக்குத் தோன்றியிருக்கிறது என்கிறார் Simone Malik.
சார்லசுக்கும் ஹரிக்கும் மட்டும்தான் கூர்மையான கழுகு போன்ற கண்கள். ஆகவே, ஹரியின் தந்தை சார்லஸ்தான் என என்னால் உறுதியாகக் கூற முடியும் என்கிறார் Simone Malik.