அதிகரித்து வரும் UPI மோசடிகள் - பாதுகாப்பாக இருப்பது எப்படி?
UPI (Unified Payments Interface) இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையாகும்.
PhonePe, Google Pay, Paytm, BHIM போன்ற செயலிகள் மூலம், மக்கள் தினசரி காய்கறி வாங்குதல் முதல் பள்ளி கட்டணம் செலுத்துதல் வரை அனைத்து பரிவர்த்தனைகளையும் UPI மூலம் செய்து வருகின்றனர்.
ஆனால், இந்த வசதியை பயன்படுத்த நிறைய மோசடிகள் நடக்கின்றன.
2025-ல், UPI மோசடிகள் AI voice scams, QR code traps, refund apps போன்ற புதிய வடிவங்களில் அதிகரித்துள்ளன.

2025-ல் அதிகம் காணப்படும் UPI மோசடிகள்
AI Voice Scam: மோசடி செய்பவர்கள், வங்கி அல்லது UPI ஆதரவு குழுவாக நடித்து, AI மூலம் உருவாக்கப்பட்ட குரல் அழைப்புகளைப் பயன்படுத்தி, பயனர்களிடம் OTP அல்லது PIN கேட்கிறார்கள்.
Fake QR Codes: கடைகள் அல்லது ஆன்லைன் தளங்களில் போலியான QR குறியீடுகள் வைக்கப்படுகின்றன. பயனர் ஸ்கேன் செய்தால், உரிய கணக்கிற்கு பணம் செலுத்துவதற்கு பதிலாக தவறான கணக்கிற்கு பணம் செல்கிறது.
Refund/Loan Apps: போலியான செயலிகள், Refund அல்லது கடன் வழங்குவதாகக் கூறி, UPI auto-debit அனுமதி கேட்கின்றன.
Phishing Links: வங்கி அல்லது UPI செயலிகளைப் போல தோற்றமளிக்கும் போலியான இணையதளங்கள், பயனர்களின் PIN மற்றும் OTP-ஐ திருடுகின்றன.
மோசடிகளால் ஏற்படும் இழப்புகள்
இவ்வாறான UPI மோசடிகளில் ரூ.500 முதல் ரூ.50,000-க்கும் மேல் இழப்புகள் ஏற்படுகின்றன.
பல குடும்பங்கள், பள்ளி கட்டணம், மருத்துவ செலவுகள் போன்ற முக்கிய பரிவர்த்தனைகளில் பாதிக்கப்படுகின்றன.
பாதுகாப்பு நடைமுறைகள்
1. நம்பகமான செயலிகள் மட்டும் பயன்படுத்தவும்
Google Pay, PhonePe, Paytm, BHIM போன்ற அங்கீகரிக்கப்பட்ட செயலிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
2. UPI PIN-ஐ எவருக்கும் பகிர வேண்டாம்
OTP, PIN, Password போன்றவை வங்கி அதிகாரிகளும் கேட்கமாட்டார்கள். யாரேனும் கேட்டால் அது மோசடி என்பதை அறிந்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
3. QR Code ஸ்கேன் செய்யும் முன் சரிபார்க்கவும்
கடைகள், உணவகங்கள், ஆன்லைன் தளங்களில் QR குறியீடு அந்த கடைக்காரரின் பெயருடன் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

4. SMS/Email Links-ஐ கவனமாக அணுகவும்
போலியான லிங்குகள் மூலம் UPI செயலிகளைப் போல தோற்றமளிக்கும் தளங்களில் PIN அல்லது OTP உள்ளிட வேண்டாம்.
5. App Settings-ஐ பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்
Biometric Lock (Fingerprint/Face ID) போன்ற பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்தவும்.
SMS அல்லது Email மூலம் பரிவர்த்தனைகளுக்கான தகவலை (Transaction Alerts) பெறவும்.
6. குடும்ப பாதுகாப்பு
குழந்தைகள், பெரியவர்கள் UPI பயன்படுத்தும்போது அடிப்படை பாதுகாப்பு விதிகளை கற்றுக்கொடுக்க வேண்டும்.
குடும்பத்தில் ஒருவரே முக்கிய பரிவர்த்தனைகளை கவனிக்க வேண்டும்.

வங்கி மற்றும் அரசின் நடவடிக்கைகள்
NPCI (National Payments Corporation of India) தொடர்ந்து பாதுகாப்பு மேம்பாடுகளை அறிமுகப்படுத்துகிறது.
இது போன்ற UPI தொடர்பான மோசடி புகார்கள் 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும் என வங்கிகளுக்கு RBI உத்தரவிட்டுள்ளது.
Cyber Crime Helpline 1930 மூலம், மோசடிகளை உடனடியாக புகாரளிக்கலாம்.
UPI பயனர்களுக்கான முக்கிய ஆலோசனைகள்
- UPI PIN-ஐ எப்போதும் ரகசியமாக வைத்துக்கொள்ளவும்.
- அறியாதவர்களிடமிருந்து வரும் அழைப்புகள் அல்லது லிங்குகளை (Link) தவிர்க்கவும்.
- மோசடி நடந்தால் உடனடியாக வங்கியையும், Cyber Crime Helpline-ஐயும் தொடர்பு கொள்ளவும்.
- Transaction History-ஐ அடிக்கடி சரிபார்க்கவும்.
UPI, இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மாறியுள்ளது. ஆனால், மோசடி செய்பவர்கள் தினசரி புதிய முறைகளை உருவாக்கி வருகின்றன. பயனர்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே பாதுகாப்பாக இருக்க முடியும்.
UPI பாதுகாப்பு என்பது தொழில்நுட்பத்தின் பொறுப்பு மட்டுமல்ல, அதற்கு இணையாக பயனர்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வு முக்கியம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |