இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு UPI மூலம் பணம் அனுப்புவது எப்படி? எளிய டிப்ஸ் இதோ
இந்தியாவின் டிஜிட்டல் பரிமாற்றமான UPI மூலம் சர்வதேச பரிமாற்றம் செய்வது குறித்து இங்கே காண்போம்.
UPI Transaction
UPI பணப்பரிமாற்றம் நொடிப்பொழுதில் சென்றடைவதால் இன்றைய திகதியில் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது.
அதிலும் குறிப்பாக, வெளிநாடுகளுக்கு பணத்தை பரிமாற்றம் செய்யும்பொழுது நீங்கள் பயன்படுத்தும் Platformயின் அடிப்படையில், வழக்கமான Wire Transfer-ஐ காட்டிலும் UPI பரிவர்த்தனை நேரம் மற்றும் பணத்தை மிச்சப்படுத்துவதாக அமைகிறது.
பெறுநரின் விரிவான தனிநபர் Account தகவலுக்கான தேவை இதில் கிடையாது. மாறாக, பெறுநரின் UPI ID மூலமாக விரைவான மற்றும் மலிவான Transaction-களை செய்யலாம்.
நீங்கள் எவ்வளவு தொகை அனுப்புகிறீர்கள் மற்றும் எந்த நாட்டிற்கு அனுப்புகிறீர்கள் என்பதன் அடிப்படையில், உங்கள் நாட்டுப் பணத்தை அந்த நாட்டு பணமாக மாற்றுவதற்கான கட்டணம் மற்றும் Transfer கட்டணம் வசூலிக்கப்படும்.
இதற்கு நீங்கள் வழக்கமான Wire Transfer மூலமாக ஆகக்கூடிய செலவை, இதனுடன் ஒப்பிட்டுப் பார்த்து நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம்.
இலங்கை, பிரான்ஸ், பூட்டான், ஓமன், அபுதாபி, நேபாளம் மற்றும் மொரிஷியஸ் போன்ற நாடுகளில் தற்போது UPI சேவைகள் கிடைக்கின்றன.
சர்வதேச UPI Paymentகளை Activate செய்வது எப்படி?
- உங்கள் போனில் PhonePe செயலியை Install செய்து, அதன் Home Screen-க்கு செல்லவும்.
- அதன் இடது மூலையில் காணப்படும் உங்கள் Profile படத்தை Click செய்யுங்கள்.
- Payment Management பிரிவில் உள்ள UPI International optionஐ தெரிவு செய்யவும்.
- பின்னர் சர்வதேச UPI Payment-களுக்கு நீங்கள் பயன்படுத்த விரும்பும் வங்கி கணக்கிற்கு அருகில் உள்ள Activate Button-ஐ click செய்யவும்.
- உறுதி செய்வதற்கு உங்களுடைய UPI PIN-ஐ Enter செய்து Activation செயல்முறையை நிறைவு செய்யவும்.
Gpay (Google Pay) மூலமாக சர்வதேச Paymentகளை செய்வது எப்படி?
- உங்கள் போனில் Google Pay செயலியை Install செய்து, Applicationஐ திறந்து அதில் உள்ள 'Scan the QR code' optionஐ Click செய்யவும்.
- பின் நீங்கள் செலுத்த விரும்பும் தொகையை வெளிநாட்டு பணத்தின் எண்ணிக்கையில் Enter செய்யவும்.
- உங்கள் Google Pay Account உடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கை தெரிவு செய்யுங்கள்.
- Transactionஐ உறுதிப்படுத்த UPI PINஐ enter செய்யவும். இப்போது உங்களது Transaction விவரங்களை மீண்டும் ஒருமுறை சரிபார்த்து Paymentஐ உறுதி செய்யவும்.
குறிப்பு:
- UPI பயன்படுத்தி சர்வதேச Transactionகளை செய்யும்பொழுது, Single Transaction தொகை எவ்வளவு என்பது குறித்த விழிப்புணர்வு பயனர்கள் இடையே இருக்க வேண்டும்.
- தற்போது ஒரு Transactionக்கு நீங்கள் 2,00,000 ரூபாய் வரை Transfer செய்யலாம். இந்த தொகைக்கு மேல் Transaction செய்ய நினைக்கும் பயனர் UPIக்கு பதிலாக நேரடி Bank Account Transferஐ தெரிவு செய்ய வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |