UPI வாடிக்கையாளர்களுக்கு NPCI வெளியிட்ட முக்கிய தகவல்...!
UPI வாடிக்கையாளர்களுக்கு NPCI முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது.
வணிகப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்
ருபே கிரெடிட் கார்டுகளை UPI உடன் இணைக்க இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) டிஜிட்டல் பேமெண்ட் துறையில் சமீபத்திய நடவடிக்கைக்குப் பிறகு, இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) இந்தியாவின் முன்னணி கட்டணத் திரட்டிகளுடன் ஒருங்கிணைந்த பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸில் (UPI) கடன் பரிவர்த்தனைகளை ஆதரிக்க கைகோர்த்துள்ளது.
இதனையடுத்து, NPCI நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த பதிவில்,
UPI இலவசம், வேகமானது, பாதுகாப்பானது மற்றும் தடையற்றது. ஒவ்வொரு மாதமும், 8 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் வணிகர்களுக்கும் இலவசமாகச் செயல்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், ஏப்ரல் 1ம் தேதி முதல் 2000 ரூபாய்க்கு மேலான வணிகப் பரிவர்த்தனைகளுக்கான UPI/Wallet கட்டணங்களை பரிந்துரைந்துள்ளது என்று பதிவிட்டுள்ளது.
UPI பரிவர்த்தனை கட்டணம் தொடர்பாக NPCI வெளியிட்ட அறிக்கையால் குழப்பம் நிலவிய சூழ்நிலையில், தற்போது Paytm நிறுவனம் டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து விளக்கம் கொடுத்துள்ளது.
அந்த பதிவில், UPI பரிவர்த்தனைக்கோ, Wallet பேமெண்ட்டுக்கோ எவ்வித கூடுதல் கட்டணமும் வாடிக்கையாளர்கள் செலுத்த தேவையில்லை.
மொபைல் பேமெண்ட் தொடர்ந்து நம் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும். மேலும், பரிமாற்றக் கட்டணங்கள் மற்றும் வாலட் இயங்குதன்மை பற்றிய NPCI சுற்றறிக்கையைப் பொறுத்தவரை, எந்த வாடிக்கையாளரும் வங்கிக் கணக்கு அல்லது PPI/Paytm Wallet இல் இருந்து UPIலிருந்து பணம் செலுத்துவதற்கு எந்தக் கட்டணத்தையும் செலுத்த மாட்டார்கள். தயவு செய்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று பதிவிட்டுள்ளது.
NPCI Press Release: UPI is free, fast, secure and seamless
— NPCI (@NPCI_NPCI) March 29, 2023
Every month, over 8 billion transactions are processed free for customers and merchants using bank-accounts@EconomicTimes @FinancialXpress @businessline @bsindia @livemint @moneycontrolcom @timesofindia @dilipasbe pic.twitter.com/VpsdUt5u7U
Regarding NPCI circular on interchange fees & wallet interoperability, no customer will pay any charges on making payments from #UPI either from bank account or PPI/Paytm Wallet. Please do not spread misinformation. #Mobile payments will continue to drive our economy forward!
— Paytm Payments Bank (@PaytmBank) March 29, 2023