கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி GPay மூலம் UPI பணப்பரிவர்த்தனை செய்யலாம்
இனி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி GPay மூலம் UPI பணப்பரிவர்த்தனைகளை செய்ய முடியும்.
ஆன்லைன் பரிவர்த்தனைகளின் வருகையால், குறைவான மக்களே கையில் பணத்தை எடுத்துச் செல்கின்றனர். இன்று, பெரும்பாலான மக்கள் Google Pay, Phone Pay, Paytm போன்ற UPI சேவைகளைப் பயன்படுத்துகின்றனர்.
வங்கிக் கணக்கில் உள்ள தொகையிலிருந்து UPI பரிவர்த்தனைகள் செய்யப்படுகின்றன. ஆனால் இப்போது வாடிக்கையாளர்களுக்கு மற்றொரு சேவை கிடைக்கிறது. இனி Google-ன் GPay மூலம் கிரெடிட் கார்டு பயன்படுத்தி UPI சேவை கிடைக்கும்.
உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி GPay மூலம் UPI பணம் செலுத்துவது எப்படி?
இதற்கு பயனரிடம் செயலில் உள்ள Google Pay கணக்கு மற்றும் குறிப்பிட்ட வங்கியின் RuPay கிரெடிட் கார்டு இருக்க வேண்டும்.
கிரெடிட் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணும் செயலில் இருக்க வேண்டும் மற்றும் வங்கியுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- முதலில் Google Pay ஆப்பை திறந்து, செட்டிங்க்ஸை மாற்ற ப்ரொபைல் ஐகானைக் கிளிக் செய்யவும்.
- இதிலிருந்து RuPay கிரெடிட் கார்டைச் சேர்ப்பதற்கான ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
- பின்னர் வங்கியைத் தேர்ந்தெடுக்கவும்.
- இறுதியாக கிரெடிட் கார்டு விவரங்களைச் சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
செயல்முறை முடிந்ததும், Google Pay மூலம் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தத் தொடங்கலாம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கார்டுகளிலும் இந்த சேவை விரைவில் கிடைக்கும்
ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, இந்தியன் வங்கி, கோடக் மஹிந்திரா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் யூனியன் வங்கி ஆகியவற்றின் ரூபே கிரெடிட் கார்டுகளுக்கு தற்போது இந்த சேவை கிடைக்கிறது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கார்டுகளிலும் இந்த சேவை விரைவில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Google Pay UPI Transaction, GPay, UPI payments through GPay using your credit card, Rupay credit cards, Google Pay, Google Pay app, Unified Payments Interface, Credit card in GPay