உப்புமா அடிக்கடி சாப்பிடுவதால் ஏற்படும் நம்பமுடியாத அற்புதங்கள்! இதய நோய்க்கு குட் பை
உப்புமா என்றாலே குழந்தைகள் தெறித்து ஓடுவார்கள்...ஏன் பெரியவர்கள் கூட பலருக்கு வெறுப்பு தான். ஆனால் உப்புமா சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.
உப்புமாவில் நிறைந்துள்ள வைட்டமின்கள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது. குறிப்பாக இதில் நிறைந்துள்ள வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஈ நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.
இந்த உப்புமாவை நாம் எடுத்துக்கொள்ளும் போது நாம் மிக சுறுசுறுப்பாக உணரமுடியும் என்று சுகாதார நிபுணர்கள் கூட கூறுகின்றனர். மேலும் இந்த உப்புமா உடன் சில காய்கறிகளையும் சேர்த்து சமைக்கும் பொழுது, இதில் நிரம்பியுள்ள புரதச் சத்துக்களும் நமக்கு கிடைக்கிறது.
ரவையில் நிரம்பியுள்ள பொட்டாசியம், நமது சிறுநீரகத்திற்கு நன்மை பயக்கிறது. இது நமது சிறுநீரகத்தில் உள்ள செயல்பாட்டை விரிவாக்குகிறது.
ரவை உப்புமாவில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் இதயத்திற்கு மிகவும் ஆரோக்கியமானவை.
அவலில் செய்த உப்புமாவோ, ஆரோக்கியமானது. முதியவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்றது என்று சில சித்த மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள்.