நாவூறும் சுவையில் கிராமத்து உப்பு கறி சிக்கன்: எப்படி செய்வது?
நம்மில் பெரும்பாலோர் இந்த உப்பு கரி சிக்கனை சாப்பிட்டிருக்க மாட்டோம்.
இந்த உப்பு கரி சிக்கன் சாதம், சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை என அனைத்திற்கும் அட்டகாசமாக இருக்கும்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் கிராமத்து உப்பு கறி சிக்கன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நல்லெண்ணெய்- 3 ஸ்பூன்
- கடுகு- ½ ஸ்பூன்
- சோம்பு- ½ ஸ்பூன்
- மிளகு- 1 ஸ்பூன்
- பட்டை- 3 துண்டு
- பூண்டு- 10 பல்
- கறிவேப்பிலை- 2 கொத்து
- காய்ந்த மிளகாய்- 20
- சின்ன வெங்காயம்- 15
- சிக்கன்- ½ kg
- கொத்தமல்லி- சிறிதளவு
- மஞ்சள்- ½ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு வாணலில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, சோம்பு, மிளகு, பட்டை சேர்த்து தாளிக்கவும்.
அதன் பின் இதில் இடித்த பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு தாளிக்கவும்.
பின்னர் இதில் விதை எடுத்த காய்ந்தமிளகாய் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
இதன் பின் நன்கு கழுவிய சிக்கன் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
15 நிமிடம் நன்கு சிக்கன் வெந்து வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான உப்பு கறி சிக்கன் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |