கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: உப்பு சீடை செய்வது எப்படி?
இன்னும் ஒரு சில நாட்களில் கிருஷ்ண ஜெயந்தி வரப்போகிறது. இன்றைய நாளில் வீட்டில் பல விதமான இனிப்பு பண்டங்களை செய்து வழிபடுவது வழக்கம்.
அதிலும் கிருஷ்னருக்கு விருப்பமான உப்பு சீடை செய்வது அனைவரினதும் வழக்கம். அதை எப்படி இலகுவான முறையில் வீட்டிலேயே செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
-
பச்சரிசி - 1 1/2 கப்
- தேங்காய் துருவியது - 1/2 கப்
-
உப்பு - தேவையான அளவு
-
கருப்பு மற்றும் வெள்ளை எள் - 1/2 கப்
- எண்ணெய் - வறுக்க தேவைக்கு ஏற்ப
- நெய் - 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் பச்சரிசியை 3 மணிநேரம் வரை ஊற வைக்க வேண்டும். தண்ணீர் வற்றியதும் மிக்ஸியில் மாவு பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் எள்ளு சேர்த்து வறுத்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்த மா கலவையுடன் எள்ளு, உப்பு மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
சீடை சுடுவதற்கு ஒரு நாள் முன் தினமே மாவை பிசைந்து வைத்து மறுநாள் சுட்டால் நல்லது.
பிசைந்து எடுத்த மாவை உருண்டையாக உருட்டிக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து உருண்டைகளை எண்ணெய்யில் போட்டு நன்கு வறுத்து எடுக்கவும்.
இறுதியாக எண்ணெய் பாத்திரத்தில் இருந்து எடுத்தால் சுவையான கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உப்பு சீடை ரெடி!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |