உடலிற்கு வலு சேர்க்கும் சத்தான உளுந்து பர்பி.., எப்படி செய்வது?
உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், நார்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளன.
உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.
அந்தவகையில், உடல் வலுவிற்கு சத்தான உளுந்து பர்பி எப்படி செய்வது என்று பாரக்கலாம்.
தேவையான பொருட்கள்
- உளுந்து- 1 கப்
- பொட்டுக்கடலை- ¼ கப்
- வெல்லம்- 2 கப்
- நெய்- ½ கப்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் உளுந்தை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
பின் இதில் பொட்டுக்கடலை சேர்த்து கிளறி அடுப்பை அனைத்து நன்கு ஆறவைத்து மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் ஊற்றி அடுப்பில் மிதமான தீயில் வைத்து கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து ஒரு வாணலில் நெய் சேர்த்து அதில் அரைத்த பொடியை சேர்த்து கரைத்த அடுப்பை பத்தவைத்து கொதிக்கவைக்கவும்.
பின்னர் இதில் ஏலக்காய் தூள் மற்றும் வெல்லக்கரைசல் சேர்த்து கலந்து, கெட்டியாகி வாணலில் ஒட்டாமல் வந்ததும் அடுப்பை அனைத்து எடுத்துக்கொள்ளவும்.
இறுதியாக இதனை தட்டில் சேர்த்து பிரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்து எடுத்து சிறிய சிறியதாக வெட்டினால் சுவையான உளுந்து பர்பி தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |