வாயை சுற்றியுள்ள கருமையை நீக்க உதவும் உளுந்து.., எப்படி பயன்படுத்துவது?
சிலருக்கு வாயைச் சுற்றியுள்ள பகுதி மட்டும் கருப்பாக இருக்கும்.
அதிகப்படியான மெலனின் உற்பத்தி, ஹார்மோன் மாற்றங்கள், வறட்சி அல்லது நீரிழப்பு, காப்ஃபைன் அதிகம் அருந்துவது, போதுமான சரும பராமரிப்பை கொடுக்காமல் இருப்பது காரணமாகும்.
அந்தவகையில், வாயை சுற்றியுள்ள கருமையை நீக்க உளுந்தை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- உளுந்து- 1 ஸ்பூன்
- ஓட்ஸ் பொடி- 1 ஸ்பூன்
- பால்- 3 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் உளுந்தை நன்கு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின் அதனுடன் உளுந்து பொடி, ஓட்ஸ் பொடி, பால் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து இதனை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
இறுதியாக முகத்தை குளிர்ந்த நீரால் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
2. தேவையான பொருட்கள்
- உளுந்து- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
- எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
- பால்- 3 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் உளுந்தை நன்கு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின் ஒரு கிண்ணத்தில் உளுந்து பொடி, மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாறு மற்றும் பால் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
அடுத்து இதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த பேக்கை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி வர வாயை சுற்றியுள்ள கருமை நீங்க முகம் சமமான பொலிவை பெரும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |