வாயை சுற்றியுள்ள கருமையை நீக்க இந்த ஒரு பொருள் போதும்.., எப்படி பயன்படுத்துவது?
சிலருக்கு வாயைச் சுற்றியுள்ள பகுதி மட்டும் கருப்பாக இருக்கும்.
அதிகப்படியான மெலனின் உற்பத்தி, ஹார்மோன் மாற்றங்கள், வறட்சி அல்லது நீரிழப்பு, காப்ஃபைன் அதிகம் அருந்துவது, போதுமான சரும பராமரிப்பை கொடுக்காமல் இருப்பது காரணமாகும்.
அந்தவகையில், வாயை சுற்றியுள்ள கருமையை நீக்க உளுந்து பருப்பை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
உளுந்து சருமத்திற்கு மிகவும் நன்மைகள் தரக்கூடிய ஒரு இயற்கை பொருள் ஆகும்.

இதில் புரதச்சத்து மற்றும் வைட்டமின் பி நிறைந்துள்ளது. உளுந்து ஒரு சிறந்த இயற்கை ஸ்க்ரப் போல செயல்பட்டு, முகத்திலுள்ள இறந்த சரும செல்களை நீக்குகிறது.
மேலும், சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தை வழங்கி, வறண்ட சருமத்தை மென்மையாக்குகிறது.
இதன் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-செப்டிக் தன்மைகள் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளைக் குறைக்க உதவுகின்றன.
மேலும், வெயிலினால் ஏற்படும் கருமையை நீக்கி, முகத்திற்கு இயற்கையான பொலிவைத் தருகிறது.
தேவையான பொருட்கள்
- உளுந்து- 1 ஸ்பூன்
- ஓட்ஸ் பொடி- 1 ஸ்பூன்
- பால்- 3 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் உளுந்தை நன்கு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின் அதனுடன் உளுந்து பொடி, ஓட்ஸ் பொடி, பால் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து இதனை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
இறுதியாக முகத்தை குளிர்ந்த நீரால் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
இந்த பேக்கை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி வர வாயை சுற்றியுள்ள கருமை நீங்க முகம் சமமான பொலிவை பெரும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |