வீட்டின் அருகே வரை வந்த காட்டுத்தீ: மக்கள் விமான நிலையங்களுக்குச் செல்லுமாறு வலியுறுத்தல்
கனடாவின் சில பகுதிகளில் காட்டுத்தீ பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. அந்த பகுதிகளில் வாழும் மக்கள் உடனடியாக விமான நிலையங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
எந்த இடத்தில் இந்த காட்டுத்தீ?
கனடாவின், The Northwest Territories என்னும் பகுதியில்தான் இந்த காட்டுத்தீ பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக, Fort Smith மற்றும் Hay River ஆகிய பகுதிகளிலுள்ள மக்கள் பாதுகாப்பு கருதி, உடனடியாக விமான நிலையங்களுக்குச் செல்லுமாறு திங்கட்கிழமையே அதிகாரி்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
(Submitted by Ron Pierrot)
அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதே இப்போதைக்கு முக்கிய நோக்கம் என்று கூறியுள்ளார் N.W.T அரசு செய்தித்தொடர்பாளர்.
வீட்டுக்கு அருகில் வரை வந்த காட்டுத்தீ
இதற்கிடையில், Jean Marie River என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றின் அருகே வரை காட்டுத்தீ வந்துவிட்டதைக் காட்டும் பதைபதைக்கவைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
This was at 3pm yesterday, at the wildfire that caused evacuation in Jean Marie River, nt. Right beside our family cabin on the access road. @CabinRadio @CKLBRADIO @1001TrueNorthFM pic.twitter.com/d4oEW9N5dX
— Paul Thunder-stealer (@Thunderstealer7) August 14, 2023
Paul Thunder-stealer என்பவர் தனது வீட்டுக்கு சற்று தொலைவு வரை வந்துவிட்ட காட்டுத்தீயைக் காட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த தீ எப்போது வேண்டுமானாலும் அந்த வீட்டை நெருங்கிவிடும் அபாயம் உள்ளது என்பதால், அவர் வெளியிட்டுள்ள காட்சி மனதை பதைபதைக்கச் செய்வதாக அமைந்துள்ளது.
ஏற்கனவே சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த கார்கள் பல தீயால் சேதமடைந்துள்ள நிலையில், அந்த கார்களில் இருந்த யாருக்காவது சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து பொலிசார் ஆய்வு மேற்கொண்டுவருகிறார்கள்.
CBC
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |