16 வயது பிரித்தானிய டீன் ஏஜ் பெண் குறித்து அவசர கோரிக்கை! புகைப்படம்
பிரித்தானியாவில் காணாமல் போன 16 வயது சிறுமி தொடர்பில் பொலிசார் அவசர கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
காணாமல் போன டீன் ஏஜ் பெண்
வடக்கு மான்செஸ்டரின் ப்ளாக்லி பகுதியை சேர்ந்தவர் Lois Laurence (16). இவர் கடந்த 27ஆம் திகதி காணாமல் போனார். தற்போது வரையில் Lois கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.
இதையடுத்து பொலிசார் அவசர கோரிக்கையை முன் வைத்துள்ளனர். அதன்படி Lois ஒல்லியான உடல்வாகு கொண்டவர் எனவும் 5 அடி 4 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
GMP
கோரிக்கை
அவர் காணாமல் போன போது கருப்பு அல்லது சாம்பல் நிற லெகிங்ஸ் அணிந்திருந்தார், கருப்பு கோட் அணிந்திருந்தார் என கூறப்பட்டுள்ளது.
Lois, Bury பகுதியுடன் தொடர்பு கொண்டவர் எனவும் அவர் அங்கிருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
இந்த டீன் ஏஜ் பெண் குறித்து எந்தவொரு தகவல் தெரிந்தாலும் உடனடியாக பொலிசாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.