பிரித்தானியாவில் இனி லேண்ட்லைன் வேலை செய்யாது! UK பயனர்கள் அறிய வேண்டிய மாற்றங்கள்!
பிரித்தானியாவில் லேண்ட்லைன் பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
லேண்ட்லைன் இனி வேலை செய்யாது!
பிரிட்டிஷ் லேண்ட்லைன் (நிலையான தொலைபேசி) பயன்படுத்துபவர்களுக்கு மிகப்பெரிய மாற்றங்கள் வரவிருக்கின்றன. BT-ன் Openreach உள்ளிட்ட தொலைபேசி சேவை வழங்குநர்கள், தங்கள் நெட்வொர்க்கை அனலாக் முறையில் இருந்து டிஜிட்டல் முறைக்கு மேம்படுத்தி வருகின்றனர்.
இதன் பொருள், பாரம்பரியமான செப்பு கம்பி லேண்ட்லைன்கள் நிரந்தரமாகச் செயல்படுவதை நிறுத்திவிட்டு, இனி அழைப்புகள் பிராட்பேண்ட் இணைப்பு வழியாக மேற்கொள்ளப்படும்.
Openreach நிறுவனம் சமீபத்தில் 137 புதிய இடங்களை "விற்பனை நிறுத்தம்" (Stop Sell) பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த இடங்களில் பழைய செப்பு கம்பி நெட்வொர்க் இனி புதிய ஆர்டர்களுக்கு கிடைக்காது என்பதையே இது குறிக்கிறது.
பிரித்தானியாவின் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை எதிர்காலத் தேவைகளுக்குத் தயார்படுத்துவதில் இந்த முயற்சி ஒரு முக்கியப் படியாகும்.
Openreach-ன் வாடிக்கையாளர் இடமாற்ற மேலாளர் ஜேம்ஸ் லில்லி, இந்த மாற்றத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
பழைய செப்பு மற்றும் புதிய ஃபைபர் நெட்வொர்க்குகள் இரண்டையும் ஒரே நேரத்தில் பராமரிப்பது செயல்பாட்டு ரீதியாகவும் வணிக ரீதியாகவும் அர்த்தமற்றது எனவும் நவீனத் தகவல் தொடர்புகளை ஆதரிக்கும் செப்பு நெட்வொர்க்கின் திறன் குறைந்து வருவதால், முழு ஃபைபர் போன்ற எதிர்காலத் தொழில்நுட்பங்களுக்கு வாடிக்கையாளர்களை மாற்றுவதே உடனடி கவனம் என்று அவர் எடுத்துரைத்தார்.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ஒரு பிரித்தானியா லேண்ட்லைன் வைத்திருந்தால், உங்கள் சேவையை மாற்ற வேண்டும் அல்லது உங்கள் பிராட்பேண்டை ஒரு முழு ஃபைபர் (Full Fibre) இணைப்புக்கு மேம்படுத்த வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |