பிரித்தானியாவுக்கு மீண்டும் திரும்பும் kissing disease: வெளியுறவு அலுவலகம் விடுத்துள்ள எச்சரிக்கை
சவுதி அரேபியாவிலிருந்து திரும்பிய சிலர், பயங்கர ஆட்கொல்லி தொற்று ஒன்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதையடுத்து, பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
மீண்டும் பரவும் kissing disease
சவுதி அரேபியாவிலிருந்து திரும்பிய 14 பயணிகளுக்கு, கொடிய நோயான meningococcal தொற்று பாதித்துள்ளதை, பிரித்தானிய வெளியுறவு அலுவலகத்தின் ஆதரவைப் பெற்ற அமைப்பான Travel Health Pro என்னும் அமைப்பு உறுதி செய்துள்ளது.
அவர்களில் பிரித்தானியா திரும்பிய மூன்று பேருக்கும், அமெரிக்கா திரும்பிய ஐந்து பேருக்கும், பிரான்சுக்கு திரும்பிய நான்கு பேருக்கும் இந்த நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய்க்கிருமி, meningitis மற்றும் septicaemia என்னும் உடல் நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடியது என்பதுடன், பாதிக்கப்பட்டவர்களில் 8 முதல் 15 சதவிகிதத்தினர் உயிரிழக்க நேரிடும் என்பதும் கவலைக்குரிய விடயமாகும்.
இந்த தொற்று வாயுடன் வாய் வைத்து முத்தம் கொடுப்பதால் பரவக்கூடியது என்பதால் kissing disease என அழைக்கப்படுகிறது. முத்தமிடுவதால் மட்டுமின்றி, பாதிக்கப்பட்டவர்கள் இருமும்போதும், தும்மும்போதும், அவர்களிடம் நெருங்கிப்பழகும்போதும் இந்த தொற்று மற்றவர்களுக்கு பரவும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த meningococci என்னும் கிருமித் தொற்றுக்கு ஆளான சிலருக்கு, வெளிப்படையான அறிகுறிகளே இருக்காது. அவர்கள் carrier என அழைக்கப்படுகிறார்கள். ஆகவே இத்தகையவர்களிடமிருந்து நோய்த்தொற்று பரவும் அபாயம் அதிகம் என வெளியுறவு அலுவலகம் எச்சரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |