இந்த அறிகுறி இருக்கா? யூரிக் அமிலம் அதிகமாகிடுச்சு- உடனே இதை பண்ணிடுங்க
ரத்தத்தில் உள்ள நச்சுப்பொருளே யூரிக் அமிலம், இது அனைவரின் உடலிலும் உற்பத்தியாகிறது, சிறுநீரகங்கள் இதனை வடிகட்டி உடலில் இருந்து வெளியேற்றுகிறது.
உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாகும் போது சிறுநீரகத்தால் வடிகட்ட முடியாமல் போகும் நிலை உருவாகும், இதனால் பல சிக்கல்கள் உண்டாகலாம்.
குறிப்பாக மூட்டுகளில் யூரிக் அமிலம் குறித்து வலியை ஏற்படுத்தும், கால்களில் விறைப்புத்தன்மையும் ஏற்படும்.
அறிகுறிகள்
-
உடல் சோர்வு
-
உலர்ந்த சருமம்
- மலச்சிக்கல்
- வீங்கிய மூட்டுகள்
- தசை விறைப்பு
- சிறுநீரக கோளாறுகள்
- தசை பலவீனம்
- மூட்டுகளில் வலி மற்றும் விறைப்பு
யூரிக் அமிலம் அதிகரித்தால்
அதிக யூரிக் அமிலமானது சிலருக்கு கீல்வாதத்தை ஏற்படுத்துகிறது, இதனால் மூட்டுகளில் வீக்கம் அல்லது வலி ஏற்படலாம்.
மேலும் சிறுநீரகத்தில் கற்களை ஏற்படுத்தும், இது முதுகுவலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரில் இரத்தம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலா
இயற்கையாக கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?
* தினமும் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை தண்ணீரில் கலந்து அருந்தலாம்.
* வைட்டமின் சி நிறைந்த பழங்கள் யூரிக் அமில பிரச்சனைக்கு சிறந்த தீர்வாகும், எனவே எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்களை உட்கொள்ளலாம்.
* அதிகளவு தண்ணீர் குடிப்பதும். சமையலுக்கு ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவதும் நல்லது.
* ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து குடிக்கலாம்.
* ஓமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளையும், சிட்ரஸ் அதிகம் நிறைந்த பழங்களையும் கண்டிப்பான முறையில் தவிர்க்க வேண்டும்.
* ஓமத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் கால்களில் ஏற்படும் வீக்கம் குறையும், குறிப்பாக செரிமானம் மேம்பட்டு வயிற்று பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது.
* யூரிக் அமில பிரச்சனைக்கு தூக்கமின்மையும் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது, குறைந்தது 7 முதல் 8 மணிநேர உறக்கம் பெரும்பாலான நோய்கள் அண்டவிடாமல் பாதுகாக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |