காலையில் எழுந்தவுடன் சிறுநீர் மஞ்சள் நிறத்தில் இருக்கிறதா? இப்படி இருந்தால் அலட்சியம் வேண்டாம்
ரத்தத்தில் உள்ள கழிவுப்பொருட்களை வெளியேற்றுவதே சிறுநீரகத்தின் முக்கிய பணியாகும், யூரியா, குளோரைடு போன்ற கழிவுகளை வெளியேற்றுவது சிறுநீரகத்தின் பணி, அதேசமயம் பொட்டாசியம், சோடியம் ரத்தத்தில் அதிகரித்தாலும் அதையும் வெளியேற்றுகிறது.
இதன் நிறத்தை வைத்தே நம் உடலின் என்ன மாதிரியான தொற்றுகள் உள்ளது என்பதை கண்டறியலாம்.
காலையில் எழுந்தவுடன் சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுவது அனைவருக்கும் பொதுவான ஒன்றுதான் அதற்காக பயப்பட தேவையில்லை, இரவு முழுவதும் தண்ணீர் அருந்தாமல் இருப்பதால் தான் கலையில் சிறுநீர் மஞ்சள் நிறத்தில் உள்ளது.
இதுகுறித்து மருத்துவர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள வீடியோவில்,
ஆனால் பகல்பொழுதில் சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுவது உடம்பில் நீர் பற்றாக்குறை காரணமாகத்தான் நிகழ்கிறது. எனவே தண்ணீர் அதிகமாக குடித்தால் மஞ்சள் நிறம் மாறி இயல்பான நிலையில் இருக்கும்.
சில சமயங்களில் ஆரஞ்சு நிறத்தில் சிறுநீர் வெளியேறச்செய்யும், இதற்கு காரணம் வலிநிவாரண மருந்துகள், ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்வதன்மூலமாகவும், கேரட், பீட்ரூட் போன்ற உணவுகளை உட்கொள்வதன் மூலமும் சிறுநீர் ஆரஞ்சு நிறத்தில் தோன்றும்.
சிவப்பு நிறத்திலும் சில சமயங்களில் சிறுநீர் வெளியேறச்செய்யும், ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் சிறுநீர் வழியாக வெளியேறுவதால் கூட சிவப்பு நிறத்தில் சிறுநீர் வரலாம்.
பழுப்பு நிறத்திலும் சில சமயங்களில் சிறுநீர் வெளியேறச்செய்யலாம், மனநலம் சார்ந்த மருந்துகளை சாப்பிடுவதாலும், வலிப்பு, மலச்சிக்கல் போன்ற நோய்களுக்கு உண்ணும் மாத்திரைகளினாலும் பழுப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறச்செய்யும்.
பச்சை நிறத்தில் சிறுநீர் போவது தொற்று காரணமாக கூட இருக்கலாம் , கல்லீரலில் பித்தநீர் பிரச்னையாக இருந்தாலும் சிறுநீர் பச்சை நிறத்தில் வெளியேறும்.
முக்கியமாக சிறுநீர் புகைபடர்ந்தது போல் காட்சியளித்தால் சிறுநீர் வரும் பாதையில் அல்லது சிறுநீர் பையில் ஏற்பட்ட தொற்றுக்கள் காரணமாக இருக்கும் மற்றும் கிட்னியில் கல் இருந்தால் கூட சிறுநீர் புகைபடர்ந்தது போல் தோன்றும்.
என சிறுநீரகத்தை பற்றி தெளிவாக எடுத்துரைத்துள்ளார் . இதுமாதிரியான அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |