மில்க் ஷேக்கிற்கு பதில் சிறுநீர்.. ஒன்லைன் டெலிவரியில் ஊழியர் செய்த காரியம்
அமெரிக்காவில், ஒன்லைனில் மில்க்ஷேக் ஆர்டர் செய்த நபருக்கு சிறுநீர் டெலிவரி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுநீர் டெலிவரி
தற்போதைய காலத்தில் சிறிய பொருளில் இருந்து எந்த பொருளாக இருந்தாலும், நேரடியாக கடைக்கு செல்லாமல் ஒன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் பழக்கத்தை நாம் கொண்டிருக்கிறோம்.
அந்தவகையில், அமெரிக்காவில் உள்ள யூட்டா மாகாணத்தைச் சேர்ந்த வூட்ஸ் என்பவர், பிரபலமான உணவு செயலில் மில்க் ஷேக் ஒன்றை ஒன்லைனில் ஆர்டர் செய்துள்ளார்.
பின்பு, சிறிது நேரத்திலேயே டெலிவரி ஊழியர் கதவை தட்டவே, மில்க் ஷேக்கை வாங்கி கொண்டார். அப்போது, டெலிவரியான மில்க் ஷேக்கை ஸ்ட்ராவை பயன்படுத்தி சிறிதளவு பருகினார். அப்போது, அதன் சுவை வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த வூட்ஸ், அது சிறுநீர் என்பதை உணர்ந்தார்.
ஊழியரின் செயல்
இதனால் கோபமடைந்த வூட்ஸ், டெலிவரி ஊழியரை அழைத்து கோபமாக கேட்டார். அதற்கு அந்த ஊழியர், டெலிவரி செய்யும் நேரத்தில் ரெஸ்ட்-ரூம் செல்ல இயலாததால் ஒரு கோப்பையில் சிறுநீர் கழித்தேன். அதனை மாற்றி உங்களுக்கு கொடுத்துவிட்டேன் என தனது தவறை ஒப்புக் கொண்டார். பின்பு, மன்னிப்பும் கேட்டுள்ளார்.
ஆனாலும், கோபம் குறையாத வூட்ஸ், உணவு டெலிவரி நிறுவனத்துக்கு போன் செய்து நடந்ததை கூறியுள்ளார். பின்பு, அந்த உணவுக்கான தொகையில் $18ஐ திரும்ப கொடுத்துள்ளது.
மேலும், டெலிவரி ஊழியரை பணிநீக்கம் செய்தும், இதுபோன்ற தவறுகளை எங்கள் நிறுவனம் பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |