ஷாருக்கான் எச்சில் துப்பியதாக எழுந்த சர்ச்சை? பிரபல நடிகை கடும் கண்டனம்
நடிகர் ஷாருக்கான், பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதி சடங்கில் அவரை அவமரியாதை செய்துவிட்டதாக அவதூறுகள் பரப்பிவந்த நிலையில் அதற்கு ஊர்மிளா மதொண்டகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதி சடங்குகள் மும்பையில் நடைபெற்றது. இதில் ஷாருக்கான் மற்றும் அவரது உதவியாளர் கலந்து கொண்டு அவருக்காக பிராத்தனை செய்த புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி பலராலும் வரவேற்கப்பட்ட நிலையில், சிலர் அதை தவறாக சித்தரித்து கொண்டு லதா மங்கேஷ்கரின் உடலில் எச்சில் துப்பி ஷாருக்கான் அவமரியாதை செய்துவிட்டதாக கூறி அதற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.
थूकना नही दुआओं को फुँकना कहते हैं।इस सभ्यता,संस्कृति को #भारत कहते हैं।
— Urmila Matondkar (@UrmilaMatondkar) February 6, 2022
प्रधानमंत्री जी की फ़ोटो तो लगा रखी हैं, उनसे कुछ सीखा होता।
भारत माँ कीं अनमोल बेटी का गाना सुनें
“ईश्वर अल्लाह तेरे नाम, सबको सन्मति दे भगवान,
सारा जग तेरी सन्तान”
(आज का दिन तो छोड़ देतें??) https://t.co/fjmUWor9Fh pic.twitter.com/c6tkhiEK1d
இந்த நிலையில் ஷாருக்கானின் செய்கையை தவறாக சித்தரிக்கும் நபர்களுக்கு எதிராக நடிகரும், அரசியல்வாதியுமான ஊர்மிளா மதொண்டகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த நேர்காணலில், நம் சமூகம் பிராத்தனைக்கும், அவமரியாதைக்கும் கூட வித்தியாசம் தெரியாத அளவிற்கு மிகவும் சீரழிந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
உலக மேடைகளில் இந்தியாவை பிரதிபலிக்கும் ஒரு நபரை இவ்வாறு அவமரியாதை செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் இந்தியாவில் அரசியல் மிகவும் தரம் கேட்டுவிட்டதாகவும் இது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது போன்று பல்வேறு பிரபலங்களும் அரசியல்வாதிகளும் ஷாருக்கானுக்கு எதிராக பரப்பப்படும் அவதூறுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.