Copa America 2024: கோல் மழை பொழிந்த உருகுவே..படுதோல்வியடைந்த பொலிவியா
கோபா அமெரிக்க கால்பந்து தொடரில் உருகுவே அணி 5-0 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை வீழ்த்தியது.
கோபா அமெரிக்கா
MetLife மைதானத்தில் நடந்த கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் உருகுவே மற்றும் பொலிவியா அணிகள் மோதின.
ஆட்டத்தின் 8வது நிமிடத்திலேயே ஃபகுண்டோ பெல்லிஸ்த்ரி (Facundo Pellistri) அபாரமாக கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து, மற்றொரு வீரர் டர்வின் நுனெஸ் 21வது நிமிடத்தில் கோல் அடிக்க, முதல் பாதியில் 2-0 என உருகுவே (Uruguay) முன்னிலை வகித்தது.
உருகுவே இமாலய வெற்றி
ஆனால் இரண்டாம் பாதியிலும் உருகுவே அணியே ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியின் மேக்சிமிலியானோ (77), பெடெரிகோ (81) மற்றும் ரோட்ரிகோ (89) அடுத்தடுத்து கோல்கள் அடித்தனர்.
இறுதிவரை பொலிவியா (Bolivia) அணியால் கோல் அடிக்க முடியாததால் உருகுவே அணி 5-0 என்ற கணக்கில் இமாலய வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் உருகுவே அணி 6 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |