Copa Americaவில் முன்னாள் சாம்பியன் பிரேசில் அதிர்ச்சி தோல்வி! பெனால்டியில் வீழ்த்திய உருகுவே
கோபா அமெரிக்கா காலிறுதியில் பிரேசில் அணி அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியது.
லாஸ் வேகாஸின் Allegiant மைதானத்தில் நடந்த காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் மற்றும் உருகுவே அணிகள் மோதின.
இரு அணிகளும் ஆட்டநேர முடிவில் கோல் அடிக்கவில்லை.இதனால் 0-0 என போட்டி டிரா ஆனது. அதனைத் தொடர்ந்து பெனால்டிஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.
உருகுவேயின் வல்வேர்டே முதல் வாய்ப்பில் கோல் அடித்தார். அடுத்து பிரேசிலின் மிலிடவ் ஷாட்டை கோல் கீப்பர் ரோச்செட் தடுத்தார்.
🤯 Ugarte with the decisive penalty kick to knock Brazil OUT of Copa America 2024!!
— UF (@UtdFaithfuls) July 7, 2024
pic.twitter.com/hbNEy8XH65
அடுத்து பென்டன்கர் உருகுவே அணிக்காக கோல் அடிக்க, பிரேசில் வீரர் பெரைராவும் கோல் அடித்தார். பின்னர் உருகுவே அணிக்கு அர்ரஸ்கேட்டா மூலம் 3வது கோல் கிடைத்தது.
ஆனால் பிரேசில் அணி வீரர் டக்லஸ் லூயிஸ் அடித்த ஷாட் கோல் போஸ்டியில் பட்டு மிஸ் ஆனது. அதே சமயம் உருகுவே அணியின் கோலை அலிஸோன் தடுத்தார்.
அதன் பின்னர் பிரேசிலின் மார்டினெல்லி கோல் அடித்தார். அடுத்து உகார்ட்டே கோல் அடிக்க உருகுவே வெற்றி உறுதியானது.
பிரேசில் இரு வாய்ப்புகளை தவறவிட்டதால் உருகுவே அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மேலும் அரையிறுதிக்கு முன்னேறிய உருகுவே, 11ஆம் திகதி கொலம்பியா அணியை எதிர்கொள்ள உள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |