Copa America 2024: அமெரிக்கா, பொலிவியாவை வீழ்த்தி உருகுவே மற்றும் பனாமா காலிறுதிக்கு முன்னேற்றம்
கோபா அமெரிக்கா தொடரில் பனாமா அணி 3-1 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை வீழ்த்தியது.
ஜோஸ் ஃபெஜார்டோ கோல்
Inter & Co மைதானத்தில் நடந்த போட்டியில் பனாமா மற்றும் பொலிவியா அணிகள் மோதின.
ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் பனாமா (Panama) வீரர் ஜோஸ் ஃபெஜார்டோ (Jose Fajardo) கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதியில் (69வது நிமிடம்) புருனோ மிராண்டா (Bruno Miranda) பொலிவியா அணிக்காக கோல் அடித்தார்.
காலிறுதியில் பனாமா, உருகுவே
எனினும் துடிப்புடன் செயல்பட்ட பனாமா வீரர்கள் எடுஹர்டோ (79வது நிமிடம்), சீசர் யானிஸ் (90+1) இருவரும் கோல்கள் அடிக்க, பனாமா அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
அதேபோல் Arrrowhead மைதானத்தில் நடந்த போட்டியில் அமெரிக்காவை எதிர்கொண்டது உருகுவே அணி. இப்போட்டியில் மதியாஸ் ஒலிவேரா (Mathias Olivera) கோல் அடிக்க, உருகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஹாட்ரிக் வெற்றி பெற்றது.
பனாமா, உருகுவே அணிகள் வெற்றி பெற்றதன் மூலம் காலிறுதிக்கு தகுதி பெற்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |