மைதானத்தில் சுருண்ட விழுந்த 27 வயது வீரர்! மாரடைப்பால் மரணம்..அதிர்ச்சியில் ரசிகர்கள்
உருகுவே கால்பந்து அணி வீரர் ஜுவான் இஸ்குவேர்டோ மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜுவான் இஸ்குவேர்டோ
பிரேசிலில் நடந்த Nacional மற்றும் Sao Paulo அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில், உருகுவே வீரர் ஜுவான் இஸ்குவேர்டோ (Juan Izquierdo) மைதானத்திலேயே சரிந்து விழுந்தார்.
அதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மாரடைப்பால் உயிரிழப்பு
இந்நிலையில், இஸ்குவேர்டோ (27) சிகிச்சை பலனின்றி 5 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்துள்ளார். மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்தது.
இதனையடுத்து உருகுவே கிளப் சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில், "இஸ்கியர்டோவின் மரணம் எங்கள் இதயங்களில் ஆழமான வலி மற்றும் தாக்கத்தை உணர்த்துகிறது மற்றும் அவரது ஈடுசெய்ய முடியாத இழப்புக்காக அனைத்து Nacional வீரர்கள், ஊழியர்களும் வருத்தத்தில் உள்ளனர்" என தெரிவித்துள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |