வைரங்கள் பதித்த ஆடையுடன் துபாயில் பிறந்தநாள் கொண்டாட்டம்: வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ
இந்தி நடிகை ஊர்வசி ரவுட்டலாவின் 31வது பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஊர்வசி ரவுட்டலா
தமிழில் லெஜெண்ட் படத்தில் நடித்திருந்தவர் ஊர்வசி ரவுட்டலா. பிரபல இந்தி நடிகையான இவர், சமீபத்தில் வெளியான டாக்கு மஹாராஜ் என்ற தெலுங்கு படத்தில் நடித்ததற்காக ரூ.3 கோடி ஊதியம் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் துபாயில் ஊர்வசி ரவுட்டலா தனது 31வது பிறந்தநாளை நேற்று கொண்டாடியிருக்கிறார்.
குடும்பத்தினர், நண்பர்கள் கலந்துகொண்ட இந்த கொண்டாட்டத்தில் அவர் வைரங்கள் பாதிக்கப்பட்ட ஆடையை அணிந்து கேக் வெட்டினார்.
வைரலாகும் வீடியோ
இதுதொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மிஸ் திவா (2015) வெற்றியாளரான இவர், 2011ஆம் ஆண்டின் Miss Tourism Queen Of The Year International வெற்றியாளரும் ஆவார்.
அதேபோல் இந்திய இளவரசி (2011), ஆசிய சூப்பர்மொடல் (2011) ஆகிய பட்டங்களையும் வென்றுள்ள ஊர்வசி ரவுட்டலாவின் சொத்து மதிப்பு ரூ.236 கோடி என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |