எந்த அணியும் ஏலத்தில் எடுக்காத வீரர்: 28 பந்தில் சதமடித்து உலக சாதனை
சையத் முஷ்டாக் அலி கிண்ணத் தொடரில் 28 பந்தில் சதம் விளாசி உர்வில் பட்டேல் சாதனை படைத்துள்ளார்.
ரூ.30 லட்சம்
2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடந்து முடிந்தது. இதில் ரிஷாப் பண்ட் ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்டு, ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் எனும் சாதனையை படைத்தார்.
அவருக்கு அடுத்த இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். அதேபோல் சில வீரர்களை எந்த அணியும் வாங்கவில்லை.
அவர்களில் ஒருவர்தான் உர்வில் பட்டேல் (Urvil Patel). குஜராத்தைச் சேர்ந்த 26 வயதான இந்த வீரருக்கு, ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.30 லட்சம் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அடிப்படை விலைக்கு கூட எந்த அணியும் உர்விலை வாங்கவில்லை.
அதிவேக சதம்
இந்நிலையில் உர்வில் பட்டேல் புதிய உலக சாதனையை படைத்துள்ளார். சையத் முஷ்டாக் அலி கிண்ணத் தொடரில் உர்வில் பட்டேல் 28 பந்துகளில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
2018யில் ரிஷாப் பண்ட் (Rishabh Pant) 32 பந்துகளில் சதம் அடித்தார். அந்த சாதனையை உர்வில் பட்டேல் திரிபுராவுக்கு எதிரான போட்டியில் முறியடித்தார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |