ஆட்டமிழக்காமல் 210 ஓட்டங்கள்! முதல் இரட்டை சதம் விளாசிய உர்வில் பட்டேல்
Urvil patel smash 210 not out in ranji trophy: ரஞ்சி கிண்ணத் தொடரில் குஜராத் அணி வீரர் உர்வில் பட்டேல் இரட்டைசதம் அடித்தார்.
கேரளா அணிக்கு எதிரான ரஞ்சி கிண்ணத் தொடர் போட்டியில், குஜராத்தின் உர்வில் பட்டேல் 227 பந்துகளில் 210 ஓட்டங்கள் விளாசினார்.
உர்வில் பட்டேல் 210
ரஞ்சி கிண்ணத் தொடர் போட்டியில் கேரளா மற்றும் குஜராத் அணிகள் விளையாடி வருகின்றன.
🚨 MAIDEN FIRST-CLASS 200 🚨 214 balls is all it took for Urvil Patel to smash his way to a magnificent maiden double century against Kerala 💯💯 Updates ▶️ https://t.co/9SDceLaOZW #RanjiTrophy | @mflone_ https://t.co/nlLjf49YF9
— BCCI Domestic (@BCCIdomestic) November 3, 2026
குஜராத் அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 534 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
உர்வில் பட்டேல் (Urvil Patel) ஆட்டமிழக்காமல் 210 (227) ஓட்டங்கள் (6 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகள்) விளாசினார். இது அவரது முதல் ரஞ்சி கிண்ண இரட்டை சதம் ஆகும்.
ஆர்யா தேசாய் 95
ஆர்யா தேசாய் 95 (135) ஓட்டங்களும், விஷால் ஜெய்ஸ்வால் 77 (120) ஓட்டங்களும் எடுத்தனர்.

நெடுமன்குழி பேசில் 3 விக்கெட்டுகளும், ஆதித்யா சர்வாத் 2 விக்கெட்டுகளும், நிதீஷ், ஜலஜ் மற்றும் வைசாக் சந்திரன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து கேரளா அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.
