வெள்ளியை முக்கிய கனிமங்களின் பட்டியலில் சேர்த்த அமெரிக்கா
அமெரிக்காவின் முக்கிய கனிமங்களின் பட்டியலில் வெள்ளி மற்றும் செம்பு சேர்க்கப்பட்டது.
அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பபிற்கு முக்கியமான கனிமங்களின் பட்டியலில் செம்பு மற்றும் வெள்ளி ஆகியவை அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளன.
இது 2022-ஆம் ஆண்டு வெளியான முந்தைய பட்டியலிலுடன், புதிதாக 10 கனிமங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் (USGS) அறிவித்துள்ளது.
இந்த புதிய பட்டியல் மொத்தம் 60 கனிமங்களை உள்ளடக்கியதாகும். செம்பு (Copper) மற்றும் வெள்ளியுடன் (Silver), யுரேனியம் (uranium), உலோகவியல் நிலக்கரி (metallurgical coal), போடாஷ்(potash), ரீனியம் (rhenium), சிலிக்கான் (silicon) மற்றும் ஈயம் (Lead) ஆகியனவும் சேர்க்கப்பட்டுள்ளன.

USGS உருவாக்கிய பொருளாதார மாதிரியின் அடிப்படையில், வெளிநாட்டு வர்த்தக தடைகள் ஏற்படுத்தும் தாக்கங்களை மதிப்பீடு செய்து இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியல், கனிமங்கள் தொடர்பான Section 232 விசாரணைகளுக்கு அடிப்படையாகவும், அமெரிக்காவில் சுரங்க அனுமதி, சுரங்க கழிவுகளில் இருந்து வள மீட்பு, மற்றும் வரிவிலக்கு போன்ற முதலீடுகளுக்கு வழிகாட்டியாகவும் பயன்படுகிறது.
2025-இல் செம்பு தொடர்பான வர்த்தக கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டதற்குப் பின்னர், இந்த சேர்க்கை முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும், அமெரிக்கா மற்றும் சீனா இடையே Rare Earth Minerals தொடர்பான பிரச்சனையைத் தீர்க்க சம்மதம் ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த புதுப்பிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரேர் எர்த் கனிமங்கள் மட்டும் 15 வகைகளை உள்ளடக்கியுள்ளன, இது மொத்த பட்டியலில் ஒரு பாகமாகும்.
இந்த நடவடிக்கை, அமெரிக்காவின் கனிம ஆதாரங்களை பாதுகாக்கும் மற்றும் உள்நாட்டு சுரங்க வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
US critical minerals 2025, copper added to US mineral list, silver critical mineral designation, USGS critical minerals update, US mining policy copper silver, strategic minerals US economy, copper silver supply chain USA, Section 232 minerals investigation, US mineral import dependency, rare earth and critical minerals US