அமெரிக்கா அறிமுகப்படுத்தியுள்ள Visa Integrity கட்டணம் - யாருக்கு பொருந்தும்?
அமெரிக்கா வரும் அக்டோபர் 1 முதல் புதிய 250 டொலர் Visa Integrity கட்டணத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
விசா விலக்கு திட்டத்தில் சேராத நாடுகளின் பயணிகளுக்கு இந்த கட்டணம் பொருந்தும்.
இந்த கட்டணத்துடன் அமெரிக்க விசா பெறுவதற்கான மொத்த செலவு 442 டொலராக உயர்கிறது.
இது உலகிலேயே மிக உயர்ந்த பயண விசா கட்டங்களில் ஒன்றாகும்.
இந்த கட்டணத்தை எதிர்கொள்ளும் நாடுகளில் இந்தியா, மெக்ஸிகோ, அர்ஜென்டினா, பிரேசில், சீனா உள்ளிட்ட நாடுகளும் அடங்கும்.
அமெரிக்கா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 2025 ஜூலை மாதத்தில் 3.1 சதவீதம் குறைந்தது. தொடர்ச்சியாக ஐந்தாவது மாதமாக குறைந்ததால், கோவிடுக்கு முன் வந்த 79.4 மில்லியன் பயணிகள் அளவை மீண்டும் எட்டும் என்ற எதிர்பார்ப்பு தகர்ந்தது.
இந்த புதிய கட்டணம் பயணிகளை அமெரிக்காவிற்கு வருவதில் தயக்கம் ஏற்படுத்தும் என துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த நடவடிக்கை, அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்ட முயற்சியாக கருதப்படுகிறது.
ஆனால், இது சர்வதேச பயணத்துறையில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
US visa integrity fee, 250 dollar visa fee 2025, US travel restrictions, Non-waiver countries visa, India US visa cost, US visa policy update, Visa fee hike USA, US tourism decline, US visa October 2025, Altour Gabe Rizzi visa comment