4,000 கோடி ராணுவ உதவி! உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்கா
ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஈடுபட உக்ரைனுக்கு, சுமார் 4000 கோடி ராணுவ உதவியை வழங்க அமெரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.
பொருளாதார உதவிகள்
அமெரிக்க தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணையை பயன்படுத்த சமீபத்தில் அனுமதி வழங்கியது.
அதேபோல் ஆயுதங்கள் வழங்குவது, பொருளாதார உதவிகள் என பலவற்றை அமெரிக்கா உக்ரைனுக்கு அளித்து வருகிறது.
அமெரிக்காவின் செயல்பாடுகளால் ஆத்திரமடைந்த விளாடிமிர் புடின், உக்ரைன் ஏவுகணையை பயன்படுத்தினால் அதற்கு பதிலடியாக அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் தீவிரம் அடைந்தது. உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
4000 கோடி
இந்நிலையில், அமெரிக்கா சுமார் 4000 கோடி ராணுவ உதவியை உக்ரைனுக்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
டொனால்டு டிரம்ப் அடுத்த மாதம் பதவி ஏற்க உள்ள நிலையில், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) அடுத்தடுத்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது உக்ரைனுக்கு உதவிடவும் அவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |