F-1 Visa ரத்து... நூற்றுக்கணக்கான மாணவர்களை நாட்டைவிட்டு வெளியேற ஆணையிட்ட ட்ரம்ப் நிர்வாகம்

Donald Trump Student Visa
By Arbin Mar 29, 2025 04:25 PM GMT
Report

சர்வதேச மாணவர்களுக்கான F-1 visa ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, அமெரிக்காவில் படிக்கும் நூற்றுக்கணக்கான சர்வதேச மாணவர்களை வெளியேறுமாறு குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமூக ஊடகங்களில்

அமெரிக்க வெளிவிவகாரத்துறையில் இருந்தே மாணவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் தாமாகவே நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

F-1 Visa ரத்து... நூற்றுக்கணக்கான மாணவர்களை நாட்டைவிட்டு வெளியேற ஆணையிட்ட ட்ரம்ப் நிர்வாகம் | Us Asking Students To Self Deport

கல்லூரி வளாகங்களில் அவர்களின் நடவடிக்கைகளை குறிப்பிட்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கல்லூரி வளாகங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மட்டுமின்றி, நடந்த சம்பவத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்த மாணவர்கள், அந்த சமூக ஊடகப் பதிவை விருப்பம் தெரிவிப்பதாக அடையாளப்படுத்திய மாணவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் ட்ரம்ப் நிர்வாகத்தால் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

ஜெலென்ஸ்கி பதவி விலக வேண்டும்... அடுத்த நெருக்கடியை முன்வைக்கும் விளாடிமிர் புடின்

ஜெலென்ஸ்கி பதவி விலக வேண்டும்... அடுத்த நெருக்கடியை முன்வைக்கும் விளாடிமிர் புடின்

இந்த விவகாரத்தில், சமூக ஊடக பதிவுகளை பகிர்ந்த, ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளாத இந்திய மாணவர்களும் சிக்கியுள்ளனர். வெளியான தரவுகளின் அடிப்படையில் 2024 மற்றும் 2024 கல்வியாண்டில் 1.1 மில்லியன் சர்வதேச மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி பயில்கின்றனர்.

வெளியேற வேண்டும்

இதில் 3.31 லட்சம் மாணவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள். தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டு பல சர்வதேச மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படுவது குறித்து அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிவிப்பை அடுத்தே, தற்போது மாணவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

F-1 Visa ரத்து... நூற்றுக்கணக்கான மாணவர்களை நாட்டைவிட்டு வெளியேற ஆணையிட்ட ட்ரம்ப் நிர்வாகம் | Us Asking Students To Self Deport

300 மாணவர்களுக்கு மேல் முதற்கட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் நடவடிக்கைகள் தொடரும் என்றும் மார்கோ ரூபியோ காட்டமாக பதிலளித்துள்ளார்.

ஒரேயடியாக 300 விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் மாணவர்கள் மற்றும் சுற்றுலாவுக்கு வந்தவர்களும் உட்படுவார்கள் என மார்கோ ரூபியோ குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்பின் அந்த திட்டத்தில் ரஷ்யா ஒருபோதும் தலையிடாது: புடினின் திடீர் மனம் மாற்றம்

ட்ரம்பின் அந்த திட்டத்தில் ரஷ்யா ஒருபோதும் தலையிடாது: புடினின் திடீர் மனம் மாற்றம்

தற்போது மின்னஞ்சல் கிடைக்கப்பெற்ற மாணவர்கள் அனைவரும் தாமாகவே நாட்டைவிட்டு வெளியேற வேண்டும். விதிகளை மீறும் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் குற்றவாளிகள் போல நாடுகடத்தும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றும் ட்ரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US