145 கிளைகளை மூடிய முன்னணி வங்கிகள் - என்ன காரனம் தெரியுமா?
முன்னணி வங்கிகள் சில இந்த ஆண்டில் 145 கிளைகளை மூடியுள்ளன.
கிளைகளை மூடும் வங்கிகள்
அமெரிக்காவில் Chase, Bank of America, Wells Fargo ஆகிய முன்னணி வங்கிகளில் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகளில் சமீபகாலமாக தங்களது வங்கி கிளைகளை மூடி வருகின்றன.
அமெரிக்காவில் வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் கிளைகளை மூடுவதாக இருந்தாலோ அல்லது சில செயல்பாடுகளை நிறுத்துவதாக இருந்தாலோ, அது குறித்து அமெரிக்க அரசின் நாணயக் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு (OCC) அறிவிக்க வேண்டும்.
இதன்படி, கடந்த ஆண்டு பேங்க் ஆஃப் அமெரிக்கா 168 வங்கிக் கிளைகளையும், யூஎஸ் பேங்க் 156 வங்கிக் கிளைகளையும், வெல்ஸ் ஃபார்கோ 126 வங்கிக் கிளைகளையும், சேஸ் 103 வங்கிக் கிளைகளையும் மூடியுள்ளன.
இந்த ஆண்டு தொடங்கி 3 மாதங்களே ஆகியுள்ள நிலையில், அமெரிக்காவில் 145 வங்கி கிளைகள் மூடப்பட்டுள்ளது. மேலும், சில கிளைகளை மூடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
டிஜிட்டல் மயம்
வங்கி சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதே, கிளைகளை மூடுவதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
பணப்பரிவர்த்தனை தொடங்கி பெரும்பாலான சேவைகள் டிஜிட்டல் மயமாகியுள்ளதால், வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வராமல் நொடிப்பொழுதில் செயலில் அல்லது கணினியில் இந்த வேலையை முடித்து விட முடியும்.
வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வருவது குறைந்துள்ளதால், கிளைகளை மூடிவிட்டு டிஜிட்டல் சேவைகளின் தரத்தை உயர்த்த வங்கிகள் திட்டமிட்டு வருகிறது.
அதே வேளையில் பெரும்பாலான ஊழியர்கள் வேலை இழப்பை சந்தித்து வருகின்றனர். மற்றொரு புறம், இணையம் மூலம் வங்கி சேவைகளை பயன்படுத்த தெரியாத வயதான வாடிக்கையாளர்கள் இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |