ட்ரம்பால் எழுந்த பீதி... பல பில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் லண்டனில் இருந்து வெளியேற்றம்
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி அச்சுறுத்தல்களால் உலகளாவிய வர்த்தகப் போர் குறித்த அச்சங்கள் காரணமாக அமெரிக்க வங்கிகள் பல பில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கத்தை லண்டனில் இருந்து வெளியேற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்க இருப்புகள் இரட்டிப்பு
கனடா, சீனா மற்றும் மெக்சிகோவிற்கு எதிராக ஏற்கனவே வரி விதித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், அடுத்து ஐரோப்பாவை குறிவைக்கலாம் என்ற அச்சமே, தங்கத்தை லண்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு மாற்ற அமெரிக்க வங்கிகளை தூண்டியுள்ளது.
மேலும், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளிலிருந்து இந்த மிகப்பெரிய தங்க வருகை அமெரிக்காவின் தங்க இருப்புக்களை இரட்டிப்பாக்கியுள்ளது. அதாவது நவம்பர் 5 ஆம் திகதி 50 பில்லியன் டொலர்களாக இருந்த அமெரிக்காவின் தங்க இருப்பு, தற்போது 106 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.
மட்டுமின்றி, ட்ரம்பின் வரி அச்சுறுத்தல் காரணமாக தங்கத்தின் விலையிலும் கடும் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. இதனால் டிசம்பர் முதல் லண்டனில் தங்கத்தின் விலைகள் சுமார் 20 டொலர்கள் வரையில் குறைந்துள்ளன.
அத்துடன், அமெரிக்காவில் தங்கத்தின் மீது ட்ரம்ப் வரிகளை விதிக்கக்கூடும் என்றும் வர்த்தகர்கள் கவலைப்படுகிறார்கள், இதனால் அமெரிக்காவில் தங்கத்தின் தேவை அதிகரிப்பைத் தூண்டியுள்ளது.
முதன்மையான வங்கிகள் பல, JPMorgan மற்றும் HSBC உட்பட தங்கள் இழப்பை ஈடுசெய்ய தங்கத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், லண்டனை விட நியூயார்க்கில் தற்போது தங்கம் குவிக்கப்பட்டுள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது.
தங்கத்தின் மீதும் வரி
இந்த நகர்வுகள் லண்டனில் தங்கத்தின் குறிப்பிடத்தக்க பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது. மட்டுமின்றி விநியோக நேரம் சில நாட்களில் இருந்து 4-8 வாரங்களாக அதிகரித்துள்ளது.
கடந்த வாரம், எஃகு மற்றும் அலுமினியம் மீது 25 சதவிகித இறக்குமதி வரிகளை ட்ரம்ப் அறிவித்தார், இதனால் தங்கத்தின் மீதும் அவர் வரிகளை விதிக்கக்கூடு என்ற அச்சத்தைத் தூண்டியுள்ளது.
லண்டனில் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,935 டொலரை எட்டியுள்ளது. மேலும், இந்த நிலை நீடித்தால், ஒரு டிராய் அவுன்ஸ் விலை 3,000 டொலர் வரையில் அதிகரிக்கலாம் என்றே சில ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
மட்டுமின்றி, கடந்த சில மாதங்களாக இங்கிலாந்து வங்கியின் மொத்த தங்க இருப்பில் சுமார் 2 சதவிகித மதிப்புள்ள சுமார் 8,000 தங்கக் கட்டிகள் அதன் பெட்டகங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |