430 கோடிகள் மதிப்புள்ள லண்டன் மாளிகை: முன்னாள் மனைவிடம் ஒப்படைக்க அமெரிக்கருக்கு உத்தரவு
அமெரிக்க தொழிலதிபர் தனது லண்டன் மாளிகையை விற்று, முன்னாள் மனைவி அதன் தொகையை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை
அமெரிக்க ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மைக்கேல் ஃப்யூச் (Michael Fuchs) கடந்த 2020யில் தனது மனைவியும், பிரெஞ்சு பத்திரிகையாளருமான அல்வினா கோலார்டியோவை பிரிந்தார்.
எட்டு ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தபோது, அவர்களது பரந்த சொத்து தொடர்பாக நீதிமன்றத்தை நாடவேண்டிய நிலை ஏற்பட்டது.
2022ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 8 மில்லியன் பவுண்ட்கள் சட்ட கட்டணங்களை இருவரும் செலுத்தினர். மேலும், மைக்கேலின் மனைவி கொலார்டியோவுக்கு 28 மில்லியனுக்கும் அதிகமான பணம் மற்றும் சொத்துக்களுக்கு உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தார்.
ஆனால், மில்லியன் கணக்கான பணத்தை செலுத்த மைக்கேல் தவறிவிட்டார். பின்னர் நடந்த நீதிமன்ற விசாரணையில், மைக்கேல் விவாகரத்து உத்தரவை தடுக்க முயன்றதும், தனது சொத்துக்களை மறைக்க 'போலி' குத்தகை ஒப்பந்தத்தைப் பயன்படுத்தியதும் தெரிய வந்தது.
கடுமையான விமர்சனங்களை வெளியிட்ட நீதிபதி
அதனைத் தொடர்ந்து மைக்கேல் ஃப்யூச்சின் தவறான நடத்தை குறித்து நீதிபதி கடுமையான விமர்சனங்களை வெளியிட்டார்.
மேலும், அவரது முன்னாள் மனைவி கொலார்டியோவுக்கு சில நிதிகளைப் பெறுவதற்கான வாய்ப்பு இப்போது உள்ளது என்றும், அந்த வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என்றும் குறிப்பிட்ட நீதிபதி, தம்பதிக்கு சொந்தமான இரண்டு சொத்துக்களை விற்க வேண்டும் என்றும், அதில் வரும் வருமானத்தை கொலார்டியோவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
அதன்படி, லண்டனில் உள்ள 36 மில்லியன் பவுண்ட்கள் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 430 கோடிகள்) மதிப்புள்ள மாளிகையை மைக்கேல் விற்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |