சுவிட்சர்லாந்தை பிளாக்மெயில் செய்கிறது அமெரிக்கா: ரஷ்யா பரபரப்புக் குற்றச்சாட்டு
சுவிட்சர்லாந்தை அமெரிக்கா பிளாக்மெயில் செய்வதாக ரஷ்யா பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளது.
நடுநிலை வகிக்கும் சுவிட்சர்லாந்து
நடுநிலை நாடான சுவிட்சர்லாந்து, ரஷ்யா உக்ரைன் போரில், சுவிஸ் தயாரிப்பான ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகள் அந்த ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்ப தடை விதித்துள்ளது.
ஆனால், அந்த தடையை நீக்க அமெரிக்கா சுவிட்சர்லாந்தை வற்புறுத்த முயன்றுவருவதாக ரஷ்யா கூறுகிறது.
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளரான Maria Zakharova கூறும்போது, உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்புமாறு சுவிட்சர்லாந்தை அமெரிக்கா அச்சுறுத்துவதுபோல் தோன்றுவதாகவும், அப்படி அனுப்பவில்லையென்றால் மோசமான நாட்களை எதிர்கொள்ளவேண்டிவரும் என சுவிட்சர்லாந்தை அமெரிக்கா மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வங்கிகள் திவாலானதைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தின் இரண்டாவது பெரிய வங்கியான Credit Suisseம் சிக்கலை சந்தித்துள்ளதைப் பார்க்கும்போது, அமெரிக்காவின் கூற்று சுவிட்சர்லாந்தை நேரடியாகவே பிளாக்மெயில் செய்வது போலவே தோன்றுகிறது என கூறியுள்ளது ரஷ்ய தரப்பு.