RAF பேர்ஃபோர்டு விமானப்படை சதி திட்டம்: 3 பேர் மீது அமெரிக்கா குற்றப்பத்திரிகை தாக்கல்
US charges 3 men allegedly linked to RAF Fairford Plot: பிரித்தானியாவில் உள்ள RAF பேர்ஃபோர்டு விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் கீழ் 3 பேரின் மீது அமெரிக்கா குற்றப்பத்திரிகை தாக்குதல் செய்துள்ளது.
3 பேர் மீது அமெரிக்கா குற்றப்பத்திரிகை தாக்கல்
அமெரிக்க போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த பிரித்தானியாவில் RAF பேர்ஃபோர்டு விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ஈரான் ஆதரவு அமைப்பை சேர்ந்த 3 நபர்கள் மீது நியூயார்க் மேன்ஹேட்டன் கூட்டாட்சி வழக்கறிஞர்கள் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இவர்கள் RAF பேர்ஃபோர்டு தளம் மட்டுமின்றி ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தாக்குதல் செய்துள்ள இந்த குற்றப்பத்திரிகையில், தற்போது அமெரிக்க காவலில் உள்ள ஈரான்-ஈராக்கிய இரட்டை குடியுரிமை பெற்ற முகமது பாக்கர் சாத் தாவூத் அல் சாதி, ஈரானை சேர்ந்த மொஹ்சென் மொஹஜேரி மற்றும் ஈராக்கை சேர்ந்த முகமது அலி அல் ஹசானி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட முகமது பாக்கர் சாத் தாவூத் அல் சாதி சிறையில் இருந்தபடி இந்த சதித்திட்டத்தை இயக்கியதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
கைது நடவடிக்கையும், ஈரானின் மறுப்பும்
செப்டம்பர் 27ம் திகதி குளோஸ்டர்ஷையர்(Gloucestershire) விமானப்படை தளத்திற்கு அருகே சந்தேகத்திற்குரிய 3 வெள்ளை நிற வேன்களை சோதனையிட்ட பிரித்தானிய காவல்துறையினர் 7 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அதே நேரத்தில் இந்த சம்பவத்தில் ஈரான் அரசுக்கு வலுவான தொடர்பு இருப்பதற்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாக பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமரின் இந்த குற்றச்சாட்டை ஈரான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.