அமெரிக்காவில் புகழ்பெற்ற சாதனையாளர் 30 வயதில் மரணம்
அமெரிக்காவில் புகழ்பெற்ற சிகரம் ஏறும் சாதனையாளர் ஜேக் வைசனன்ட் விபத்தில் உயிரிழந்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த 30 வயதான மலையேறும் சாதனையாளர் ஜேக் வைசனன்ட், சியரா நெவாடாவில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து உயிரிழந்தார்.
ஜேக் வைசனன்ட்
கடந்த ஆகஸ்ட் 3-ஆம் திகதி அன்று, சியாரா நெவாடாவில் புகழ்பெற்ற சாதனையாளரான ஜேக் வைசனன்ட் மலையேற்றத்தில் ஈடுபட்டார்.

அப்போது எதிர்பாராத விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். துலாரே கவுண்டி ஷெரிப் அலுவலகம் அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது.
கலிபோர்னியாவின் மேமத் லேக்ஸ் பகுதியைச் சேர்ந்த 30 வயதான அவரது மரணம் குறித்து வேறு எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.
எனினும், வைசனன்ட்டின் வாழ்நாள் தோழியான பெய்லி மூர் போன்றவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |