இந்தியாவில் FCRA சட்டத்திருத்தம்: அமெரிக்காவில் இருந்து எழுந்த எதிர்ப்பு குரல்
இந்தியாவில் கொண்டு வரப்படவுள்ள FCRA சட்டத்திருத்தத்திற்கு அமெரிக்காவின் குடியரசுக் கட்சி தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் FCRA சட்டத்திருத்தம்
இந்தியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மத அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதை கட்டுப்படுத்தும் விதமாக இந்திய நாடாளுமன்றத்தில் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.
இந்நிலையில் இந்தியா கொண்டுவரவுள்ள இந்த FCRA சட்டத்திருத்தத்திற்கு அமெரிக்க குடியரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரைலி மூர் தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

அமெரிக்கா எம்.பி-யான ரைலி மூர் தன்னுடைய குற்றச்சாட்டில், இந்த FCRA சட்டத்திருத்தத்தின் மூலம் இந்திய அரசு இந்தியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களையும், கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வழிவகுக்கும் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்க எம்.பி ரைலி மூர் தெரிவித்த கருத்து
நம் ஆண்டவராகிய ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பிறகு, சில பத்தாண்டுகளில் புனித தோமையார் மலபார் கடற்கரையில் பயணம் செய்த போதே இந்தியாவில் கிறிஸ்தவம் இருந்து வருகிறது.
இவ்வளவு நீண்ட கிறிஸ்தவ வரலாறும், பாரம்பரியமும் இருக்கும் போதே, தேவாலயங்களையும், மத அறக்கட்டளைகளையும் கையகப்படுத்த அனுமதிக்கும் FCRA சட்டத்திருத்தத்திற்கு இந்திய அரசு பரிசீலித்து வருகிறது.
Christians have been in India since St. Thomas the Apostle traveled to the Malabar Coast just decades after the resurrection of our Lord Jesus Christ.
— Rep. Riley M. Moore (@RepRileyMoore) August 4, 2026
But despite this long Christian history, India’s Parliament is considering amending Foreign Contribution Regulation Amendment…
இது கிறிஸ்தவர்கள் மீதான தெளிவான தாக்குதல் ஆகும். இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டால் இருநாடுகளும் இடையிலான உறவில் இது பெரும் கவலைக்குரிய விஷயமாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.
புதிய FCRA சட்ட திருத்தம் சொல்வது என்ன?
FCRA சட்டத்திருத்தம் 2026 என்பது ஒரு தொண்டு நிறுவனத்தின் FCRA உரிமம் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது அதன் காலாவதி காலம் நிறைவடைந்து விட்டாலோ அந்த நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து பெற்ற நிதி மற்றும் சொத்துகளை நிர்வகிக்க ஒரு நியமிக்கப்பட்ட அதிகார அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற வழிமுறையை இந்த சட்டம் வழிவகுக்கிறது.
இந்த சொத்துகள் ஒருவேளை மத தலங்களாகவோ, கோவில், தேவாலயங்கள் போன்ற அமைப்பாக இருந்தால் அதன் தன்மை மாறாமல் பராமரிக்க வேண்டும்.
இந்த சட்ட விதிகளை மீறுபவர்களுக்கான சிறைத்தண்டனை 5 ஆண்டுகளில் 1 ஆண்டாக குறைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |