ஐ.எஸ் தீவிரவாதிகளை வைத்து தாக்குதல்கள் நடத்த அமெரிக்கா சதிதிட்டம்! உண்மையை அம்பலப்படுத்திய ஊடகம்
ஐ.எஸ் பயங்கரவாதிகளை பயன்படுத்தி தாக்குதல்களை நடத்த அமெரிக்க சதிதிட்டம் தீட்டியதாக சிரிய அரசு நடத்தும் செய்தி நிறுவனமான சனா குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் இராணுவப் படைகள், வடகிழக்கு சிரிய நகரமான Ash Shaddadi-ல் உள்ள தங்களது அங்கீகரிக்கப்படாத இராணுவத் தளத்திலிருந்து, ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த 10 தீவிரவாதிகளை கிழக்கு மாகாணமான Deir Ez-Zor-க்கு விமானத்தில் ஏற்றிச் சென்றதாக சிரிய செய்தி நிறுவனமான சனா தெரிவித்துள்ளது.
சிரிய-ஜோர்டானிய எல்லைக்கு அருகே அமைந்துள்ள Al-Tanf இராணுவத் தளத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் அமெரிக்க இராணுவ மருத்துவர்களால் தீவிரவாதிகள் பரிசோதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
சிரிய ஆயுதப்படைகள், குடிமக்கள் மற்றும் முக்கிய நெடுஞ்சாலைகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகளை பயன்படுத்த அமெரிக்க இராணுவப்படைகள் திட்டமிட்டுள்ளதாக சனா குற்றம் சாட்டியது.
Al-Hasakah மாகாணத்தில் உள்ள சிறைச்சாலையிலிருந்து பத்து பயங்கரவாதிகளை அமெரிக்கப் படைகள் Ash Shaddadi தளத்திற்கு கொண்டு சென்றதாக மற்ற செய்தி நிறுவனங்களும் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டன.
அமெரிக்க இராணுவம் Al-Hasakah மற்றும் Deir ez-Zor மாகாணங்களில் சிரியா அனுமதியின்றி இயங்கி வருகிறது, சிரியாவில் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைக் கொண்ட பகுதிகளை அமெரிக்க தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் அமெரிக்க குழு இருப்பது சிரியாவின் இறையாண்மையையும் சர்வதேச சட்டத்தையும் மீறியதாக சிரிய அதிகாரிகள் பலமுறை கூறியுள்ளனர்.