ட்ரம்பின் புலம்பெயர்தல் எதிர்ப்பு நடவடிக்கை: நீதிமன்றம் அதிரடி
ட்ரம்பின் புலம்பெயர்தல் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றிற்கு எதிராக நீதிமன்றம் ஒன்று அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
நீதிமன்றம் அதிரடி
அமெரிக்காவின் தெற்கு எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர் புகலிடம் கோருவதற்கு எதிராக அமெரிக்க அரசு எடுத்துள்ள முயற்சியை அமெரிக்க ஃபெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
அமெரிக்காவுக்குள் வந்துவிட்ட புலம்பெயர்ந்தோர் புகலிடம் கோரி விண்ணப்பிக்க புலம்பெயர்தல் மற்றும் தேசிய சட்டப்படி உரிமை உள்ளது என்று கூறியுள்ள நீதிமன்றம், அதை தடுப்பது, சட்டத்திற்கெதிரானதாகும் என்றும் கூறியுள்ளது.

விடயம் என்னவென்றால், இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் விசாரித்த நிலையில், இருவர் ட்ரம்பின் முடிவுக்கு எதிராகவும் ஒருவர் ஆதரவாகவும் முடிவெடுத்தனர்.
அந்த மூன்று நீதிபதிகளில், ட்ரம்பின் முடிவுக்கு ஆதரவாக முடிவெடுத்தவர், ட்ரம்பால் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |