விவாகரத்து வழக்கில் ரூ.15,323 கோடி பத்திரம் - தமிழக தொழிலதிபருக்கு அமெரிக்கா நீதிமன்றம் உத்தரவு
விவாகரத்து வழக்கில் ரூ.15,323 கோடி பத்திரம் தாக்கல் செய்ய தமிழக தொழிலதிபருக்கு அமெரிக்கா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீதர் வேம்பு
தமிழ்நாட்டின் தஞ்சாவூரை சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு, உயர் கல்வி பயில அமெரிக்கா சென்ற போது, 1996 ஆம் ஆண்டில் அட்வென்ட்நெட் என்ற நிறுவனத்தை நியூஜெர்சியில் தொடங்கினார்.

Credit : Yourstory.com
2009 ஆம் ஆண்டு நிறுவனத்திற்கு ZOHO என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இவர் அமெரிக்காவில் வசித்த போது, பிரமிளா ஸ்ரீனிவாசன் என்பவருடன் திருமணமாகி இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளது.
2019 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு குடிபெயர்ந்த ஸ்ரீதர் வேம்பு, 2021 ஆம் ஆண்டில் மனைவியை பிரிவதாக அறிவித்தார்.
இவர்களின் விவாகரத்து வழக்கு, கலிபோர்னியா நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
ரூ.15,323 கோடி பத்திரம்
இந்த வழக்கில், ஸ்ரீதர் வேம்பு, ஆட்டிசம் குறைபாடு உடைய மகனையும், என்னையும் நிர்கதியாக விட்டுச் சென்றுவிட்டதாக பிரமிளா தெரிவித்துள்ளார்.

Credit: X.com
மேலும், விவாகரத்துக்கு பின்னர் சொத்தில் தனக்கு சரிபாதியை ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்பதால், எனக்கு தெரியாமலே அவரது சொத்துக்களை சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் பெயருக்கு மாற்றி விட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனைவியின் உரிமையை பாதுகாக்கும் வகையில், ஸ்ரீதர் வேம்பு 1.7 பில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.15,323 கோடி) பிணைப்பத்திரம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
கலிபோர்னியா சட்டப்படி, திருமணத்திற்கு பின்னர் இருவரும் சேர்த்த சொத்துக்களை, இருவரும் சமமாக பிரித்துக்கொள்ள வேண்டும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |